கட்ச், ஆக. 18- குஜராத் தின் கட்ச் பகுதியில் அமைந்துள்ள தொல்லியல் தளமான ‘தோலாவிரா’, யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒரு முக்கிய இடமாகும். அய்யாயிரம் ஆண்டுகள் பழமையான இந்த தோலாவிரா நகரம், அக்காலத்திலேயே ஒரு நவீன ‘ஸ்மார்ட் சிட்டி’க்கு இணையான கட்டமைப்பைக் கொண்டி ருந்தது என்றால் அது மிகையல்ல.
2018-ஆம் ஆண்டில், தோலாவிராவை உலகப் பாரம்பரியச் சின்னங்கள் பட்டியலில் சேர்ப்ப தற்கான ஆவணங் களை இந்தியத் தொல்லியல் துறை யுனெஸ்கோவுக்கு அனுப்பி வைத்தது. குஜராத் அரசும் இந்தத் தளத்தை மேம்படுத்த குழுக்களை அமைத்தது. வரலாற்றைப் பொறுத்த வரை, கட்ச் பகுதி தனித் துவமான தொடர்பைக் கொண்டிருப்பதுடன், பல்வேறு வரலாற்று உண்மை களையும் வெளிப்படுத்தி வருகிறது
அண்மையில், இந்தியா–பாகிஸ்தான் எல்லைக்கு அருகேயுள்ள கட்ச் பாலை வனப் பகுதியில் 100க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் ஒரே இடத் தில் கண்டெடுக்கப்பட்டன.
இங்கு புதைக்கப்பட்டி ருந்த 100-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகளின் தலைப்பகுதி வடக்கு நோக்கியும், கால்கள் தெற்கு நோக்கியும் இருக்கும்படி வைக்கப்பட்டிருந்ததுதான் இதில் மிகவும் ஆச்சரிய மான விசயம். மேலும், அவற்றின் முகங்கள் மேற்கு நோக்கி இருந்தன.
இந்த எலும்புக்கூடுகள் கிடைத்த இடத்தை சுற்றிலும் ஆய்வு செய்த போது, மேலும் அய்ந்து தொல்லியல் தளங்கள் கண்டறியப்பட்டன. அங்கு மண்பாண்டங்கள், சுடுமண் (டெரகோட்டா) பொம்மைகள் மற்றும் மனிதக் குடியிருப்புகளின் எச்சங்கள் கிடைத்தன. முதற்கட்ட ஆய்வுகளின் படி, இவை இடைக்காலத் தைச் சேர்ந்தவையாக இருக்கலாம் எனத் தெரிய வந்துள்ளது.
இந்த ஆரம்பக்கட்ட முடிவுகள் விரிவான ஆய்வுக்குப் பிறகு உறுதி செய்யப்பட்டால், அது கட்ச் அல்லது குஜராத் தின் வரலாற்றில் மட்டு மல்லாமல், ஒட்டுமொத்த இந்தியாவின் வரலாற்றி லும் பல அடையாளம் தெரியாததை விலக்கிப் புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சும் என ஆய்வா ளர்கள் தெரிவித்துள்ளனர்.
