மாட்டுத் தொழுவத்தில் சந்திப்பு
பாணன்
இந்தியச் சமூக அமைப்பில் ஜாதியம் மற்றும் தீண்டாமை என்பன அடித்தட்டு மக்களை மட்டுமல்லாது, அதிகாரத்திலும், புகழிலும் உயர்ந்த நிலையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட தலைவர்களையும் கூட விட்டுவைக்கவில்லை என்பதை வரலாறு பலமுறை நிரூபித்துள்ளது.
நந்தனார் முதல் மல்லிகார்ஜுன கார்கே வரை ‘புனித’த்தின் பெயரால் இன்றும் அவமானப்படுத்தப்படும் நிகழ்வுகள் கொடூரமானவை.
ஜாதியம் என்பது பொருளாதார நிலை அல்லது அரசியல்வாதியின் அதிகாரம் அல்லது உயர் பதவியிலான தகுதியை அடிப்படையாகக் கொண்டது அல்ல; அது பிறப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு படிநிலை அதிகாரம். அண்ணல் அம்பேத்கர் இது தொடர்பாக கூறும் போது ‘ஸநாதனத்தில் வர்னாஸ்ரமம்’ என்பது படிகள் இல்லாத 4 அடுக்கு மாடி போன்றதாகும் கீழ் அடுக்கில் பிறந்தவர்கள் என்றுமே மேல் அடுக்கிற்குச் செல்லமுடியாது, என்று கூறினார்
நந்தனார் தொடக்கம்
8ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நந்தனார் என்ற தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சேர்ந்தவர் கல்வி கேள்வியில் சிறந்தவர்.
இவர் சிதம்பரம் நடராஜன் கோயிலுக்குச் செல்ல விரும்பினார். ஆனால், ஜாதியக்கொடுமை அவரை கோயில் உள்ளே விடவில்லை. கோயிலில் பல முறை நுழைய விருப்பப்பட்டவரை தீயில் நுழைந்து ‘புனித’மாக பூணூல் அணிந்து கோயிலுள் வருவாயாக என்று சிவன் கூறியதாகக் கதைவிட்டு கோயிலின் முன்பாகவே அவரை தீமூட்டி அதில் தள்ளிவிட்டுக் கொலை செய்தனர். இதற்கு முன்பும் பின்பும் பல தலைவர்களுக்கு – அறிஞர்களுக்கு தீண்டாமைக் கொடுமைகள் நடந்துள்ளது.
ஆனால், நந்தன் என்பவரை அவரின் கல்வி கேள்வி பாடல்களை தங்களுக்கு சாதகமானதாக பயன்படுத்த அவரை திருநாளைப்போவார் என்ற பெயரில் நாயன்மாராக்கிய் பிறகு இந்த உண்மை வெளியானது.

2026 – கார்கேவுக்கு அவமானம்

2024 – அகிலேஷ்க்கு அவமானம்
வைக்கம் கோயில் நுழைவுப் போராட்டமே
தீண்டாமைக் கொடுமைக்கு ஓர் அடையாளமாகும்!
தீண்டாமைக் கொடுமைக்கு ஓர் அடையாளமாகும்!
திருவிதாங்கூர் பிரஜாசபா (மக்களவை போன்றது) உறுப்பினர் மற்றும் சிறந்த கல்வியாளர், விழிப்புணர்வு இதழ் தொடர்ந்து நடத்தியவர் தேசாபிமானி டி.கே. மாதவன் ஈழவர் சமுகத்தைச் சேர்ந்தவர். 1921 செப்டம்பர் 28-ஆம் ஆண்டு காந்தியாரை சந்திக்க திருநெல்வேலி வருகிறார்.
காந்தியார் திருநெல்வேலியில் உள்ள சேரன்மாதேவி சிறீ நாராயணா பங்களா என்று கூறப்படும் வெங்கட சுப்பாரெட்டியார் பங்களாவின் பின்புற அறையில் தங்கி இருந்தார்.
காரணம், அவரை சந்திக்க கேரளாவில் இருந்து ஈழவச் சமுதாயத்தைச் சேர்ந்த தா.க.மாதவன் வருவதாக இருந்தது. சேரன்மாதேவி ரயில் நிலையத்தின் அருகில் இருந்த அந்தப் பங்களா இன்று ‘காந்தி மாளிகை’ என்று அழைக்கப்படுகிறது.
மாதவன் காந்தியாரைச் சந்திக்க வந்த போது காந்தியாருக்கும் மாதவனுக்கும் மாட்டுத்தொழுவத்தில் பலகை போட்டு அமரவைத்தனர்.
இது தொடர்பாக மாதவன் நாயர் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டுவரும் “அலுமத்தில” என்ற அமைப்பின் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.
விமானத்தையே கழுவி தீட்டு கழித்த நிகழ்வு
தென்காசி தொகுதி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினராகவும், ஒன்றிய அமைச்சராகவும் இருந்த
எம்.அருணாச்சலம் 1994ஆம் ஆண்டு (மே மாதம்), மதுரையில் இருந்து சென்னை சென்று அங்கிருந்து டில்லி செல்ல இருந்தார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மறைந்த ஜெ.ஜெயலலிதா மதுரையில் இருந்து சென்னைக்கு செல்ல விருந்தார்.
இந்த நிலையில் எம்.அருணாச்சலம் சென்னை செல்லும் சிறப்பு விமானத்தில் ஏறி அமர்ந்துவிட்டார். தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அருணாச்சலம் அமர்ந்த விமானத்தில் நான் ஏறமாட்டேன் என்று கூறிவிட்டார். இதனை அடுத்து விமான நிலைய நிர்வாகம் அது ஒன்றிய அரசின் கீழ் வருகிறது இருப்பினும் அருணாசலத்தைக் கீழே இறக்கிவிட்டு விமானத்தை ‘புனித’ நீர் ஊற்றி தீட்டு கழிக்கப்பட்ட பிறகு ஜெயலலிதா அந்த விமானத்தில் ஏறி சென்னை சென்றார்.
தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒன்றிய அமைச்சர் ஒருவர் அந்த விமானத்தில் ஏற முயன்றதால், அவர் ஏறிய பிறகு அல்லது அந்தச் சம்பவத்திற்குப் பிறகு “விமானம் கங்கா தீர்த்தம் / ‘புனித’ நீரால் கழுவித் தூய்மைப்படுத்தப்பட்டது” என்ற செய்தி காட்டுத்தீ போலப் பரவியது. எதிர்க்கட்சிகளும் தாழ்த்தப்பட்டோர் அமைப்புகளும் இதை ஒரு “தீண்டாமை கொடுமை” என கடுமையாகக் கண்டித்துப் போராட்டங்களில் ஈடுபட்டன.
முதலமைச்சருக்கு ஏற்பட்ட அவமானம்
பீகாரின் முதலமைச்சராக ஜிதன் ராம் மான்சி பதவி வகித்த காலத்தில் 1.10.2014 அன்று, பீகார் மாநிலத்தின் மதுபனி மாவட்டத்தில் உள்ள பர்ம பரமேஸ்வரி தேவி கோயிலில் வழிப்பட்டார். அவர் திரும்பிய சில நிமிடங்களிலேயே, கோயில் நிர்வாகத்தினரும் சில மேல்ஜாதியினரும் கோயில் வளாகத்தைக் கழுவி, சிலைகளைப் பாலாலும் தண்ணீராலும் ‘புனித’ப்படுத்தினராம்.
பாட்னாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் முதலமைச்சர் ஜிதன் ராம் மான்சி இந்நிகழ்வை பகிரங்கமாகப் பேசி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்: “நான் நாட்டில் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக இருந்தபோதிலும், சமூகத்தில் நிலவும் ஜாதியக் கொடுமைகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை. ஒரு முதலமைச்சர் கோயில் நுழைவு செய்த பிறகே கோயில் ‘தீட்டாகிவிட்டது’ எனக் கூறி அதைக் கழுவி சுத்தம் செய்கிறார்கள் என்றால், சாதாரண தாழ்த்தப்பட்டோர் சமூக மக்களின் நிலை என்ன?” என்றார். ஜாதியக் கட்டமைப்பு மற்றும் தீண்டாமையின் வேர்கள் சமூகத்தில் எவ்வளவு ஆழமாக ஊடுருவியுள்ளன என்பதை சுட்டிக்காட்டவே தான் இதை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
குடியரசுத்தலைவருக்கு இழைக்கப்பட்ட அவமானமும் தர்மேந்திரப் பிரதானின் தலையீட்டால்
நடவடிக்கையில் இருந்து தப்பிய பார்ப்பனர்கள்
நடவடிக்கையில் இருந்து தப்பிய பார்ப்பனர்கள்
ராம்நாத் கோவிந்த் குடியரசுத் தலைவராக இருந்தபோது, 2018 மார்ச் 18 அன்று ஒடிசாவில் உள்ள புகழ்பெற்ற பூரி ஜெகநாதர் கோவிலுக்கு தனது மனைவி சவிதா கோவிந்துடன் வழிபடச் சென்றார். ஆனால், கர்ப்பகிரகத்திற்கு அருகில் சென்ற அவரை பார்ப்பன அர்ச்சகர்கள் தள்ளிவிட்டனர். இதனை சற்றும் எதிர்பாராத அவரது மனைவியும் மகளும் தூக்கிவிட்டனர். கோயில் நிர்வாகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பாதுகாவலர்கள் அமைதியாக நின்று வேடிக்கை பார்த்தனர்.
குடியரசுத் தலைவர் மாளிகையின் கடிதம் & விசாரணை
இந்த அவமரியாதை நிகழ்வைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் மாளிகை பூரி மாவட்ட ஆட்சியருக்குக் கடும் கண்டனக் கடிதம் ஒன்றை அனுப்பியது.
தீண்டாமைக் கோணம்: ராம்நாத் கோவிந்த் அவர்கள் தாழ்த்தப்பட்ட (தலித்) சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் தான் அவருக்கு கோயில் பூசாரிகளால் இத்தகைய அவமரியாதை ஏற்பட்டது என்ற சர்ச்சை நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது.
அப்போதைய ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் தலையீட்டால் பார்ப்பன அர்ச்சகர்கள் மீதான கடுமையான சட்ட நடவடிக்கைகள் அல்லது தொடர் விசாரணைகள் கைவிடப்பட்டது.
2017ஆம் ஆண்டு மே மாதம் இராஜஸ்தானில் உள்ள அஜ்மீர் ‘பிரம்மா’ கோயிலுக்குச் சென்றபோது கோவிலுக்கு உள்ளே அனுமதிக்கால படியில் வைத்து பூஜை செய்து பிரசாதம் கொடுத்து அனுப்பினார்கள்.


கார்கேவை அவமானப்படுத்திய நபர்
ஆர்.எஸ்.எஸ்.பாஜக பின்புலம் கொண்டவர்
உத்தரகாண்ட் கல்வி அமைச்சரை
கோயிலைக் கழுவச்சொல்ல கோயில் நிர்வாகம்
– முட்டுகொடுத்த முதலமைச்சர்
கோயிலைக் கழுவச்சொல்ல கோயில் நிர்வாகம்
– முட்டுகொடுத்த முதலமைச்சர்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற கனிச்சி சீதாராமன் கோயிலுக்கு தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த அம்மாநில கல்வி மற்றும் மாணவர் நலன் சமூக நீதி அமைச்சர் கஜந்தாஸ் சுவாமி வழிபாடு செய்யச் சென்றிருந்தார். அவர் கோயிலுக்குச் சென்று திரும்பிய போது கோயில் நிர்வாகம் அவரை கோயில் வளாகம் முழுதும் தூய்மைப்படுத்த உத்தரவிட்டது.
அவரும் கோயில் வளாகத்தைப் பெருக்கித் தூய்மைப்படுத்திய உடன் கோயில் நிர்வாகம் கங்கை நீர் கொண்டு கோயிலைக் கழுவியது. இந்த தீண்டாமைக்கொடுமை தொடர்பான காணொலி சமூக வலைதளங்களில் பரவியதை அடுத்து, எதிர்கட்சியினரும் சில அமைப்பினரும் இதற்குக் கடுமையான எதிர்ப்பையும் விமர்சனங்களையும் தெரிவித்தனர். இந்த கொடுமை தொடர்பாக அவர் சட்டப்பேரவையிலும் மறைமுகமாக பேசியிருந்தார்
இதற்கு முதலமைச்சரின் பதில் ஏற்றுக்கொள்ள முடியாதாக இருந்தது. அவர் பேசும்போது “ஆன்மிகத் தலங்களையும், மடங்களையும், கோயில்களையும் தூய்மைப்படுத்துவது மிகவும் ‘புனித’மான மற்றும் உன்னதமான சேவையாகும். இதில் எவ்வித பாகுபாடோ அல்லது தாழ்வு மனப்பான்மையோ இல்லை” என்று கூறினார். “கோயிலைத் தூய்மைப்படுத்துவது என்பது யார் செய்தாலும் அது பெருமைக்குரிய ஒரு விசயம். ‘புனித’மான இந்தச் செயலை தீண்டாமையோடு ஒப்பிட்டு விமர்சிப்பது, இந்துத்துவ கலாச்சாரத்தையும் அதன் மரபுகளையும் எதிர்க்க நினைக்கும் சக்திகளின் திட்டமிட்ட சதியாகும்.” எனத் தெரிவித்தார்.
தனது தொகுதியில் கோயிலில் நுழைந்த
அகிலேஷை இழிவுபடுத்திய பாஜக!
அகிலேஷை இழிவுபடுத்திய பாஜக!
சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் 2024 மக்களவைத் தேர்தலின் போது, கன்னோஜ் தொகுதியில் போட்டியிட்டு பிரச்சாரத்தைத் தொடங்குவதற்கு முன் மே 6, 2024 அன்று சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்தார்.
அகிலேஷ் கோயிலை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களிலேயே, பாஜகவைச் சேர்ந்த நிர்வாகிகள் அக்கோயிலை கங்கை நீரைக் கொண்டு கழுவிச் சுத்தம் செய்தனர்.
இந்நிகழ்விற்கு அகிலேஷ் கடும் கண்டனம் தெரிவித்தார். “நான் கோயிலுக்குச் சென்று வந்த பிறகு, அதை கங்கை நீரைக் கொண்டு சுத்தம் செய்துள்ளனர். பாஜகவின் இந்த நடவடிக்கை அவர்களின் குறுகிய மனப்பான்மையையும், ஜாதி சார்ந்த பாகுபாட்டையும் காட்டுகிறது” என்று குற்றம்சாட்டினார்.
“அவர்கள் எந்த கங்கை நீரால் சுத்தப்படுத்தினாலும், மக்களின் மனதில் உள்ள மாற்றத்தை அவர்களால் மாற்ற முடியாது” என்றும் குறிப்பிட்டிருந்தார். நாடாளுமன்றத் தேர்தல் காலக்கட்டத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, உத்தரப்பிரதேச அரசியலில் ஜாதி பாகுபாடு, பின்தங்கிய சமூகத்தினர் மீதான பார்வை மற்றும் கோயில் அரசியல் குறித்த கடுமையான விவாதங்களை ஏற்படுத்தியது.
மாயாவதி, அகிலேஷ் இருந்த முதலமைச்சர் இல்லத்தை 7 நாட்கள் யாகம் நடத்தி தீட்டுகழித்த சாமியார் முதலமைச்சர்
2017-ஆம் ஆண்டு மார்ச் மாதம் யோகி ஆதித்யநாத் உத்தரப் பிரதேசத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, லக்னோவில் உள்ள முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லமான 5, காளிதாஸ் மார்க் வீட்டில் குடியேறும் முன்பு கோரக்க்பூர் மடத்தில் உள்ள பசுவின் கோமியம், கங்கை உள்ளிட்ட ‘புனித’ நதிகளின் நீர் ஆகியவை முதலமைச்சர் இல்லத்தின் அனைத்து அறைகளிலும், வளாகம் முழுவதிலும் தெளிக்கப்பட்டன.
கோரக்பூர் மடத்தில் இருந்து பசு மாடு மற்றும் கன்று முதலமைச்சர் இல்லத்திற்கு அழைத்து வரப்பட்டு, பங்களாவின் முக்கியப் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டன.


மனிஷா அனுராகி
பூசாரிகளின் வருகை மற்றும் ருத்ராபிஷேகம்
9 பார்ப்பன அர்ச்சகர்கள் லக்னோவிற்கு வரவழைக்கப் பட்டனர். அவர்கள் முதலமைச்சர் இல்லத்தில் ருத்ராபிஷேகம், வாஸ்து பூஜை மற்றும் சிறப்பு ஹோமங்களை நடத்தி தீட்டு கழித்தனர். (ருத்ராபிஷேசம் என்பது சூத்திரர்கள் பயன்படுத்திய வீடு மற்றும் நிலங்களை பெறும் போது தீட்டு நீங்க செய்யப்படும் யாகம் ஆகும்)
வீட்டின் சுவர்களில் மற்றும் கதவுகளில் ‘புனித’ குறியீடான ‘ஸ்வஸ்திக்’ மற்றும் ‘ஓம்’ குறியீடுகள் சந்தனம் மற்றும் குங்குமத்தால் வரையப்பட்டன.
இதற்கு முக்கிய காரணம் சாமியாருக்கு முன்பு மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த அகிலேஷ், அதற்கு முன்னால் மாயாவதி அங்கு முதலமைச்சராக இருந்தனர் இதனால் சாமியார் தீட்டுகழித்து 7 நாட்கள் யாகம் செய்த பிறகே சாமியார் முதலமைச்சர் அங்கு சென்றார். மேலும் அங்கு இருந்த அனைத்து உயரதிகாரிகளையும் மாற்றிவிட்டு உயர்ஜாதியின அதிகாரிகளை மட்டுமே நியமித்தார்.
அம்பேத்கர் பவுத்த மதம் தழுவ முக்கியக் காரணமாக அமைந்த காலாராம் கோயில் அவமானம்!
நாசிக் பஞ்சவடி பகுதியில் அமைந்துள்ள காலாராம் கோயில் வளாகத்திற்குள் செல்லவோ, கடவுளை வழிபடவோ தாழ்த்தப்பட்டோர் அனுமதிக்கப்படவில்லை. கோயிலுக்கு வெளியே இருந்த வீதிகளில் நடப்பதற்குக் கூட தடைகள் இருந்தன.
இதனை உடைக்க நாசிக் காலாராம் கோயில் சத்தியாகிரகம் (1930) 1930 மார்ச் 2 அன்று அம்பேத்கரின் தலைமையில் போராட்டம் தொடங்கியது. தாதாசாஹேப் கெய்க்வாட் போன்ற தலைவர்கள் இதில் முக்கியப் பங்காற்றினர்.
ஆதிக்க ஜாதியினரும், கோயில் நிர்வாகத்தினரும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உரிமை வழங்க மறுத்து தீவிர எதிர்ப்பைக் காட்டினர்.
போராட்டத்தைக் கண்ட ஆதிக்க ஜாதியினர், ஒடுக்கப்பட்ட மக்கள் உள்ளே நுழைந்துவிடக் கூடாது என்பதற்காகக் கோயில் கதவுகளை முற்றிலும் பூட்டினர்.
1930 ஏப்ரலில் நடைபெற்ற ராமநவமி திருவிழாவின் போது, வழக்கமாக தூரத்தில் நின்று தேர் இழுக்கும் உரிமை மட்டுமே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இருந்தது. அன்றைய நாள் தேர் வடத்தைப் பிடிக்க அம்பேத்கர் தலைமையில் சென்றபோது, ஆதிக்க ஜாதியினர் தேரை இழுக்க விடாமல் தடுத்து வன்முறையில் ஈடுபட்டனர்.
கற்கள் வீச்சு மற்றும் தாக்குதல்: அமைதியாகப் போராடிய தொண்டர்கள் மீது ஆதிக்க ஜாதியினர் கற்களை வீசித் தாக்குதல் நடத்தினர். இதில் அம்பேத்கரும், அவரது ஆதரவாளர்களும் காயமடைந்தனர் இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது சுற்றியுள்ள கிராமங்களில் கடும் பொருளாதார மற்றும் சமூகப் புறக்கணிப்புகள் ஏவப்பட்டன. அவர்களுக்குக் கூலி மறுக்கப்பட்டது.
குடிநீர் கிணறுகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. ஆங்கிலேய அரசு 144 தடை உத்தரவைப் பிறப்பித்தது. கோயில் நிர்வாகம் தொடர்ந்து நீதிமன்றப் படிகளையேறி, கோயிலை ஒரு தனியார் சொத்தாகக் காட்டி ஒடுக்கப்பட்டோரின் நுழைவைத் தடுத்தது.
இந்தப் போராட்டம் சுமார் 5 ஆண்டுகள் (1930 – 1935) வரை தொடர்ந்தது. கோயில் கதவுகள் தொடர்ந்து அடைக்கப்பட்டே இருந்ததால், ஹிந்து மதத்தின் ஜாதியக் கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுவது கடினம் என்பதை அம்பேத்கர் உணர்ந்தார். 1935இல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவந்த அம்பேத்கர், வரலாற்றுச் சிறப்புமிக்க ஓர் அறிவிப்பை வெளியிட்டார். “நான் இந்துவாகப் பிறந்தேன், அது என் கட்டுப்பாட்டில் இல்லை; ஆனால் நிச்சயமாக நான் ஓர் இந்துவாக இறக்க மாட்டேன்!” என்றார். இந்தக் காலாராம் கோயில் போராட்ட அனுபவமே, பின்னாளில் அவர் பவுத்த மதத்தைத் தழுவுவதற்கும், இந்து மத அமைப்பிற்கு வெளியே தனது மக்களுக்கான அரசியல், கல்வி மற்றும் பொருளாதார உரிமைகளுக்காகப் போராடுவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது.
பா.ஜ.க. பெண் சட்டமன்ற உறுப்பினருக்கே இழைக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை!
உத்தரப் பிரதேச மாநிலம், ஹமீர்பூர் மாவட்டத்தில் உள்ள ரிகோடாரத் தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரான தாழ்த்தப்பட்டச் சமூகத்தைச் சேர்ந்த மனிஷா அனுராகி, தனது தொகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கச் சென்றபோது, உள்ளூர் மக்களின் வேண்டுகோளின்படி அங்குள்ள தூம்பிரேஸ்வர் மகாதேவ் கோயிலுக்கு. 31.7.2028 அன்று மூலவர் கருவறைக்குள் சென்று பூஜை செய்து வழிபட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் கோயில் வளாகத்திற்குள் சென்று வழிபாடு செய்து திரும்பிய பிறகு, கோயில் அர்ச்சகர்கள் “ஒரு பெண் உள்ளே சென்றதால் கோயில் தீட்டாகிவிட்டது” எனக் கூறி, கோயிலை கங்கை நீரால் கழுவி சுத்தம் செய்து சிறப்புப் பூஜைகளை நடத்தினர். மேலும், கோயில் சிலைக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
இது தொடர்பாக பாஜக பெண் சட்டமன்ற உறுப்பினர் மனிஷா கூறும்போது, “பெண்களை தேவியாக மதிக்கும் ஒரு நாட்டில், பெண் என்பதால் மட்டுமே ஒருவரைத் தாழ்வாகப் பார்ப்பதும், அவர் சென்ற இடத்தை தீட்டாகக் கருதுவதும் மிகவும் கெட்ட வாய்ப்பாகும். இது பெண்களை அவமதிக்கும் செயலாகும்” என்றார்.
இவைகளை வலுவாகக் கண்டிக்காமல் தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் இன்று கார்கேவுக்கு பெரும் அவமானம் இழைக்கப்பட்டுள்ளது. மேலும், இது நூற்றாண்டுகளாக நிலவும் அறியாமை என்றும், இத்தகைய மூடநம்பிக்கைகளுக்கு எதிராக மக்கள் விழிப்புணர்வு பெற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
