பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர்களுக்கு…

சிறப்பு புத்தக சலுகைகள்

பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வழிகாட்டுதலோடு இவ்வாண்டு தந்தை பெரியார் பிறந்த நாள் விழா தொடர்பான போட்டிகள் அறிவிக்கப்படுகிறது.

  • 2026 செப்டம்பர் 12 ஆம் தேதி அன்று போட்டிகள் எல்லா கழக மாவட்டங்களிலும் நடத்தப்பட வேண்டும்.
  • மாவட்டப் பொறுப்பாளர்கள் தங்களுக்குள் கலந்து பேசி திட்டமிட வேண்டும்.
  • போட்டி அரங்கத்தில் குறித்த நேரத்தில் நடத்தப்பட வேண்டும்.
  • போட்டிக்கான விவரம் மாணவர்களுக்கு விரைவில் சென்றடைய வேண்டும்.
  • போட்டி விவரத்தை பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கலாம்.
  • மாணவர்கள் தங்கள் சொந்தப் பொறுப்பில் பெற்றோருடனோ அல்லது பாதுகாவலருடனோ வரவேண்டும்.
  • போட்டியில் பங்கு பெற கட்டணமும் இல்லை.
  • பங்கேற்பவர்கள் தங்களது அடையாள அட்டையை கொண்டு வர வேண்டும்,
  • நடுவர்களை முன்னரே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.
  • போட்டியில் பங்கேற்பவர்களுக்கு உரிய வசதிகள் செய்து தர வேண்டும்.
  • பரிசுகளை மாவட்டப் பொறுப்பாளர்கள் முடிவு செய்துகொள்ளலாம்.
  • சான்றிதழ்கள், நூல்கள் வாங்கிட வேண்டும்.
  • நூல்கள் குறைந்த விலையில் இருந்தால் போதும். புத்தக விவரங்களை பெரியார் திடல் நூல் விற்பனை நிலையத்தில் பெறலாம்.
  • போட்டி விவரங்களை ஒத்த கருத்துடையவர்களுக்கு பகிரலாம். அவர்களையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
  • பரிசுத் தொகையை நன்கொடையாக பெற வேண்டும். எல்லோருடைய பங்களிப்பும் இருக்குமாறு அமைத்துக்கொள்ள வேண்டும்.
  • திராவிடர் கழகத் தோழர்கள் ஒத்துழைக்க வேண்டும்.

போட்டி   வகுப்பு               தலைப்பு

பேச்சுப்    6 முதல் 9 வரை   1. வைக்கம் போராட்டத்தில் தந்தை பெரியார்

போட்டி                        2. பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள்

  1. பெரியார் என்னும் உலகத்தலைவர்

10 முதல் 12 வரை 1. சுயமரியாதை இயக்கத்தின் ‘அனைவருக்கும் அனைத்தும்’

  1. தமிழுக்குத் தந்தை பெரியாரின் பங்களிப்பு
  2. என்றும் தேவை பெரியார்.

கல்லூரி அளவில்  1. நூறாண்டு கால மாற்றத்தில் தந்தை பெரியாரின் பங்கு.

  1. அறிவியல் மனப்பான்மையும், மூடநம்பிக்கையும்
  2. தந்தை பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி

ஓவியப்    6 முதல் 9 வரை   1. தந்தை பெரியார் [மார்பளவு படம்]

போட்டி                        2. பெரியாரும் பெண் விடுதலையும்

  1. பெரியாரும் வைக்கம் போராட்டமும்

10 முதல் 12 வரை 1. தந்தை பெரியார் கண்ட ‘இனி வரும் உலகம்’

  1. தந்தை பெரியாரும் அறிஞர் அண்ணாவும்
  2. அறியாமை, மூடநம்பிக்கைகளின் கடும் எதிரி தந்தை பெரியார்

மேலும் தொடர்புக்கு:

இரா. தமிழ்ச்செல்வன் தலைவர் 96770 11415     வி.மோகன் பொதுச்செயலாளர் 91598 57108

பகுத்தறிவாளர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *