அறிவியல் துணுக்குகள் 6ஜி அலைக்கற்றையால் சுவருக்கு பின்னுள்ள மனிதர்களைக் கூட கண்டறிய முடியுமாம்

சிறப்பு புத்தக சலுகைகள்

உலகம் முழுவதும் அடுத்த தலைமுறை இணையம் குறித்த ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, 6ஜி (6th ஜெனரேசன்) தொழில்நுட்பம் 2030க்குள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தரவுகள் பரிமாற்றத்தோடு ரேடார் போன்ற உணர்திறனொடும் வர வாய்ப்புள்ளது. இதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட உணர்திறன் மற்றும் தொலைதொடர்பு (Integrated Sensing and Communication)  என்று பெயர்.

இந்த தொழில்நுட்பத்தால் பயனாளருடைய உருவம், உடலமைப்பு, முகக் குறிப்புகள் வரை கண்டறிய வாய்ப்புள்ளதாகவும் சுவர்களைத் தாண்டியும் இந்த அலை மூலமாக மூச்சு விடுதல், இதயத் துடிப்பின் அளவு ஆகியவற்றை அறிய வாய்ப்புள்ளது எனவும் ஜெர்மனி தரவு பாதுகாப்பு மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனொடு செயற்கை நுண்ணறிவும் சேர்ந்து மனிதர்களை அடையாளப்படுத்தக் கூட முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு எதிராக பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

செவ்வாயின் விண்கல் கூறும்
சூரியக் குடும்பத்தின் ரகசியம்

2019இல் செவ்வாயிலிருந்து பிரிந்து பூமியில் விழுந்த NWA 13441 என்ற விண்கள் அல்ஜீரியாவில் கண்டறியப்பட்டது. இதுவரை கண்டறியப்பட்ட செவ்வாயின் விண்கல் போல் அல்லாது இது அசாதரணமான வயதையும் செவ்வாயின் புதிய தகவலையும் நமக்கு தருகிறது.

பொதுவாக செவ்வாயின் விண்கற்கள் ஒன்று 600 மில்லியன் ஆண்டுகளுக்கு நெருக்கமாக  இருக்கும் அல்லது 2.4 பில்லியன் ஆண்டுகளுக்கு நெருக்கமாக இருக்கும். இதுவரை இதற்கு மாற்றாக இருந்ததில்லை. ஆனால் இந்த விண்கல் இடைப்பட்ட வயதைக் கொண்டிருக்கிறது.

வயது மட்டுமல்ல, இதன் பாறைகளின் நியோடியம் அய்சோடோப்புகளின் இருப்பு செவ்வாயின் பாறைகள் சூரியக் குடும்பத்தின் ஆரம்பகாலம் முதலாக எந்த மாற்றமும் இல்லாது இருப்பதற்கான சான்றாகும். செவ்வாயில் பூமி போன்று கண்ட நகர்வுகள் இல்லை என்பதும் அதன் மாறாத்தன்மைக்கு காரணமாகும்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *