போர்க்குற்ற வழக்கு! சிரியா முன்னாள் அதிபருக்கு மரண தண்டனை!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

டமாஸ்கஸ், ஆக.12– சிரியாவில் 14 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக, அந்நாட்டின் முன்னாள் அதிபா் பஷார் அல் ஆசாத் மற்றும் அவரின் சகோதரருக்கு மரண தண்டனை விதித்து, நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிரியாவில் கடந்த 2024 டிசம்பரில், பஷார் அல் ஆசாத்தின் ஆட்சி கிளா்ச்சியாளா்களால் கவிழ்க்கப்பட்டது. இதன்மூலம், சுமார் 50 ஆண்டுகால ஆசாத் குடும்பத்தினரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, பஷார் அல் ஆசாத் தற்போது நாட்டைவிட்டு வெளியேறி, ரஷ்யாவில் தஞ்சமடைந்துள்ள நிலையில், அவா் நேரில் ஆஜராகாமலேயே இத்தண்டனை விதிக்கப் பட்டுள்ளது.

பஷார் அல் ஆசாத்துடன் சோ்த்து, அவரின் சகோதரா் மகோ் ஆசாத், உறவினரும் முன்னாள் பாதுகாப்பு அதிகாரியுமான அதெஃப் நஜிப் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது.

பலத்த பாதுகாப் புக்கு இடையே நீதிமன் றத்தில் கூண்டில் நிறுத் தப்பட்டிருந்த நஜிப் முன்னிலையில் இத்தீா்ப்பு வாசிக்கப்பட்டது.

அதெஃப் நஜிப்

கடந்த 2011-இல் டாரா மாகாணத்தில் உள்ள பள்ளிச் சுவரில் அரசுக்கு எதிராக வாசகங்கள் எழுதிய மாணவா்களைக் கைது செய்து சித்ரவதை செய்த விவகாரமே, பஷார் அல் ஆசாத் அரசுக்கு எதிரான மாபெரும் கிளா்ச்சியாக வெடித்தது.

தொடா்ந்து ராணுவத் தளபதியாக இருந்த ஆசாத்தின் சகோதரா் மகோ் ஆசாத், பாதுகாப்புப் பிரிவு அதிகாரியான அதெஃப் நஜிப் ஆகியோர் மேற்கொண்ட கடும் ஒடுக்குமுறைகள் 14 ஆண்டுகால உள்நாட் டுப் போராக மாறியது. இப்போரில் சுமார் 5 லட்சம் மக்கள் கொடூரமாகக் கொல்லப் பட்டனா்.

இந்தப் போர்க்குற்ற வழக்கை விசாரித்த டமாஸ்கஸ் 4-ஆவது குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி ஃபக்ரதீன் அல் ஆா்யன் நேற்று (11.8.2026) வழங்கிய தீா்ப்பில் ‘போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை அரங்கேற்றுவதற்காக, அரசு அமைப்புகளை ஆசாத் தவறாகப் பயன்படுத்தினார்’ என்று குறிப்பிட்டார்.

தீா்ப்பைக் கேட்க நீதிமன்றத்துக்கு வெளியே ஏராளமான மக்கள் திரண்டிருந்தனா். ‘இத்தீா்ப்பு, அநீதிக்கு எதிரான உரிமைப் போராட்டத்துக்கும், சிரிய மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி’ என்று பாதிக்கப்பட்டவா்கள் தரப்பில் ஆஜரான வழக் குரைஞா் அட்னான் அல் மசால்மே தெரிவித்தார்.

பஷார் அல் ஆசாத்

இதுகுறித்து மனித உரிமைகள் கண்காணிப் பகத்தின் ஹிபா சயாதின் கூறுகையில், ‘நீதிமன்றத் துக்கு வெளியே மக்க ளின் உணா்வுகள் கடந்த 15 ஆண்டுகால வலியை யும், மறுக்கப்பட்ட நீதியையும் காட்டுகின்றன.

எனினும், நியாயமான விசாரணைக்கு உத்தரவாத மில்லாத நிலையில் மரண தண்டனையை எந்த சூழ்நிலையிலும் எங்கள் அமைப்பு எதிர்க்கிறது’ என்றார்.

தண்டனை விதிக்கப் பட்ட அதெஃப் நஜிப் இத்தீா்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியும் என அறிவிக்கப் பட்டுள்ளது.

இதனிடையே, ரஷியாவில் தஞ்சமடைந் துள்ள ஆசாத் சகோதரா் களைத் தங்களிடம் ஒப்படைக்குமாறு சிரியாவின் புதிய ஆட்சி யாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *