தமிழ்நாட்டில் ரூ.545 கோடி சைபர் மோசடி 48 மணி நேர அதிரடி வேட்டையில் 837 பேர் கைது!

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 11- தமிழ்நாடு முழுவதும் இணைய வழி சைபர் குற்றங்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மாநில சைபர் குற்றப் பிரிவு காவல்துறை நடத்திய 48 மணி நேர சிறப்பு அதிரடி வேட்டையில், ரூ.545 கோடிக்கும் அதிகமான மோசடிகளில் தொடர்புடைய 837 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாநிலம் முழுவதும் பதிவு செய்யப்பட்ட 601 சைபர் குற்றம் எஃப்.அய்.ஆர் (FIR) வழக்குகளின் அடிப்படையில் 837 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தேசிய சைபர் குற்றப் புகார் இணையதளத்தில் (NCRP) பதிவான சுமார் 9,804 புகார்களின் அடிப்படையில், மொத்தம் ரூ. 545.27 கோடி அளவிலான நிதி மோசடி பரிவர்த்தனைகள் கண்டறியப்பட்டுள்ளன.  பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள்: கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 204 கைப்பேசிகள், 185 சிம் கார்டுகள், 114 வங்கி பாஸ்புக்குகள், 73 ஏடிஎம் அட்டைகள், 29 காசோலை புத்தகங்கள் மற்றும் கணினிகள் உள்ளிட்ட பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சைபர் குற்றவாளிகள் தாங்கள் ஏமாற்றிய பணத்தைப் பெறுவதற்கும், பிற கணக்குகளுக்கு மாற்றுவதற்கும் ஏழை எளிய மக்களின் வங்கி கணக்குகளை ‘வாடகைக்கு’ (Money Mule) எடுத்துப் பயன்படுத்தி வந்துள்ளனர். அதிக தரகுக்கு ஆட்பட்டு, தங்களது வங்கி கணக்குகளைப் பயன்படுத்த அனுமதித்த இடைத்தரகர்கள் மற்றும் உடந்தையாக இருந்த நபர்களைக் கண்டறியும் நோக்கில் இந்த சிறப்பு வேட்டை நடத்தப்பட்டது. மேலும், இதுபோன்ற தவறான பயன்பாடுகளைத் தடுக்க புதிதாக 157 எஃப்.அய்.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காவல்துறையின் எச்சரிக்கை: “பொதுமக்கள் யாரும் தரகுக்கோ அல்லது பிற நன்மைகளுக்கோ ஆசைப்பட்டு தங்களது வங்கி கணக்குகள், ஏடிஎம் அட்டைகள் மற்றும் சிம் கார்டுகளை அடையாளம் தெரியாத நபர்களிடம் வழங்கக் கூடாது. சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைக்கு உங்கள் கணக்கு பயன்பட்டால், அதற்கு நீங்களே முழுப் பொறுப்பாவீர்கள்” என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

சைபர் மோசடிக்கு ஆளானால் உடனடியாக 1930 என்ற இலவச உதவி எண்ணையோ அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தையோ தொடர்பு கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *