அமெரிக்காவில் வேலை இழந்தால் 60 நாள் அவகாசம் ரத்து இந்தியர்களுக்கு எச்சரிக்கை

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

வாசிங்டன், ஆக. 10- அமெரிக்காவில் குடியேற்ற நோக்கமற்ற விசாவில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வழங் கப்படும் 60 நாள் அவ காசத்தை ரத்து செய்யும் புதிய விதியை அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது.

இத்திட்டம் அமலானால், வேலையை இழக்கும் இந்தி யர்கள் உள்ளிட்ட வெளிநாட் டினர் உடனடியாக அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

உள்நாட்டுப் பாது காப்புத் துறையின் இந்த முன்மொழிவு கூட்டாட்சி நிர்வாகம் மற்றும் நிதிநிலை அறிக்கை அலுவலகத்தின் பரிசீலனையில் உள்ளதாக அதிகாரப்பூர்வ இணைய தளம் தெரிவிக்கிறது. இறுதி செய்யப்பட்டால், முதன்மை குடியேற்ற நோக்கமற்ற விசா பெற்றவர்கள் மற்றும் அவர்களைச் சார்ந் திருப்பவர்களின் 60 நாள் அவகாசம் முற்றிலும் ரத்து செய்யப்படும்.

தற்போதைய நிலையில், வேலை இழந்த வெளிநாட்டு ஊழியர்களுக்கு புதிய வேலை தேட 60 நாட்கள் அவகாசம் வழங்கப் படுகிறது. புதிய விதியின் கீழ், விசா காலம் முடிவ தற்கு முன்பே வேலை முடிவுக்கு வந்தால், அவர் களும் அவர்களைச் சார்ந்திருப்பவர்களும் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும். ‘அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள்’ அமைப்பு விசா நிலைத் தவறை மன் னிக்காவிட்டால், அமெரிக் காவிற்குள்ளேயே விசா நிலையையோ அல்லது பணியாளரையோ மாற்றிக் கொள்ள முடியாது. இந்த நடைமுறை அமலானால், அமெரிக்காவில் அதிகளவில் பணிபுரியும் இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *