பா.ஜ.க. ஆளும் அசாமில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு சி.ஆர்.பி.எப். முகாமில் துப்பாக்கிச் சூடு சக வீரர்களைக் கொன்ற படைவீரர் தற்கொலை

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

குவாஹாட்டி, ஆக. 6- அசாம் மாநிலம், நகாவ்ன் மாவட்டத்தில் உள்ள மத்திய ரிசர்வ் காவல் படை முகாமில், சிஆர்பிஎஃப் வீரர் ஒருவர் தனது இரு சக வீரர்களை சுட்டுக் கொன்றுவிட்டு, பின்னர் தற்கொலை செய்து கொண்டார். மேலும், மற்றொரு சிஆர்பிஎப் அதிகாரி இந்தச் சம்பவத்தில் காயமடைந்தார்.

அசாம் மாநிலம், நகாவ்ன் மாவட்டம் கட்டிமாரியில் மத்திய ரிசர்வ் காவல் படையின் (சிஆர்பிஎஃப்) 34ஆவது பட்டாலியன் முகாம் அமைந்து உள்ளது. இங்கு நேற்று (4.8.2026) காலை 7 மணி அளவில், முகாமின் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்புப் பணியில் இருந்த ஆந்திரப் பிரதேசத் தைச் சேர்ந்த, உதவி துணை ஆய்வாளர் பல்லானி பிரேமபாரம், தனது சக ஊழியர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில், சிஆர்பிஎஃப் வீரர்கள் விஷ்ணுபிரசாத் பகேல், ராம்நவால் சிங் யாதவ் ஆகியோர் உயிரிழந்தனர்.

உதவி துணை ஆய்வாளர் மனே கோவிந்த் சிறீபுல் பலத்த காயமடைந்தார். அவர் மேல் சிகிச்சைக்காக குவா ஹாட்டி மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவத்துக்குப் பிறகு, பல்லானி பிரேமபாரம் முகாமில் உள்ள ஒரு படுக்கையறைக்குச் சென்று தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு உயிரிழந்தார். இச் சம்பவத்துக்கான காரணம் குறித்து, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *