சென்னை, மார்ச் 11- கரோனா பாதிப்பு மீண்டும் அதி கரித்துள்ளதாக அமைச் சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ் வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னை சைதாப்பேட் டையில் 10.3.2023 அன்று காய்ச்சல் தடுப்பு முகாமை தொடக்கி வைத்தார்.
அப்போது செய்தியா ளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் ஒமைக் ரான் வகை கரோனா பாதிப்பு அதிகரித்து வரு கிறது. ஒரு மாதத்துக்கு முன் 2 பேருக்கு மட்டுமே இருந்த கரோனா தற் போது 20 பேருக்கு மேல் அதிகரித்துள்ளது. ஒமைக்ரான் வகை கரோனா அதிகரித்தா லும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற் படுவதில்லை. இதனால் பதற்றம் கொள்ளத் தேவையில்லை. பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடை வெளி ஆகியவற்றை பின் பற்றுவது நல்லது. கரோனா தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றினாலே இன்ஃ ப்ளூ யன்ஸா தொற்று பாதிப் புகளில் இருந்து தற்காத் துக் கொள்ள முடியும் என்றார்.