மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சொத்து அபகரிப்பு! ராமநாதபுரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கைது!

1 Min Read

மதுரை, ஆக. 5- மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பூஜை உள்ளிட்ட தர்ம காரியங்களுக்கென வழங்கிய ரூ.60 கோடி மதிப்புள்ள அறக்கட்டளை சொத்துகள் அபகரித்த வழக்கில் ராமநாதபுரம் ஆட்சியரின் நேர்முக உதவியாளரை மத்திய குற்றப் பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் மற்றும் கள்ளழகர் கோயில் பூஜை மற்றும் தர்ம காரியங்களுக்கு புதுக் கோட்டை தட்சிணாமூர்த்தி துரைராஜா, துரைராணி அறக்கட்டளை மூலம் 1930ஆம் ஆண்டு வழங்கிய  மதுரையிலுள்ள ரூ.60 கோடி (தற்போதைய மதிப்பு) 1.79 ஏக்கர் இடத்தை  முறைகேடாக  பட்டா மாறுதல் செய்து பத்திரம் பதிவு செய்யப்பட்டது.

இது குறித்து  மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் செல்லத்துரை கொடுத்த புகாரின்பேரில் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி வெள்ளைச்சாமி என்பவரின் மனைவி ராமாயி, அவரது மகன்கள் ராஜ்குமார், ராஜேந்திரன், குழந்தையா, புஷ்பராஜ், மதுரை பிபீகுளம் மேனாள் விஏஓ அரசன், மேனாள் வட்டாட்சியர் அன்பழகன், மேனாள் சார் பதிவாளர்கள் அனந்த ராமன், பிரசாந்த் சந்தன கருப்பன், உசிலம்பட்டி  இளையராஜா  உட்பட 19 பேர் மீது மதுரை மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இது தொடர்பான ஆவணங்களை சேகரித்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், போலி ஆவணங்கள் மூலம்  முறைகேட்டாக பட்டா பெற்று அபகரித்த வழக்கில் ராஜ்குமார், இதற்கு முக்கிய நபராக இருந்த உசிலம்பட்டி இளையராஜா ஆகியோர் ஏற்கெனவே கைதான நிலையில், வழக்கில்  தொடர்புடைய மேனாள் வட்டாட்சியர், தற்போது ராமநாதபுரம் மாவட்ட  ஆட்சியரின் நேர்முக உதவியாளராக இருக்கும் (நில எடுப்பு பிரிவு) அன்பழகனை கைது செய்தனர்.  இந்த வழக்கில் இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *