(இந்தப் பக்கத்தில் மறுப்புகளும், ஆர்.எஸ்.எஸ்.,
சங் பரிவார், பிஜேபி வகையறாக்களுக்குப்
பதிலடிகளும் வழங்கப்படும்)
நட்டா ஜி! படிங்க ஜி!
ஊசி மிளகாய்
பா.ஜ.க.வின் தேசீயத் தலைவர் நட்டா என்பவர் (அவரை மக்கள்தனியாகப் போனால் எங்கும் அடையாளம் காணக் கூட மாட்டார்கள். ஒரு வேளை அவரது மாநிலத்தில் அல்லது டில்லியில் அவரிடம் நமஸ்தே போடுபவர்கள் அறிந்திருக்கக் கூடும்). அவர், அடிக்கொரு தடவை – தமிழ் நாட்டைப் ‘பிடிக்க’ வந்து அருளுபதேசத்தை ஆவேசமாகச் செய்து சென்று விடுவார்!
நேற்று முன்தினம் கிருஷ்ணகிரியில் அவரது கட்சி அலுவலகங்கள் – பத்து அலுவலகங்களை ஒரே திறப்பில் – திறந்து வைத்து திருவாய் மலர்ந் தருளியுள்ளார்!
1. தி.மு.க.வுக்குத் தமிழ் மக்கள் மீது அன்பே கிடையாதாம்!
2. பா.ஜ.க. தவிர மாநில கட்சிகள் உள்பட எல்லாம் குடும்ப அரசியல் செய்கிறதாம்!
அச்சச்சோ, அப்படியா சேதி!
ஹரே பாபாஜி ஜி.ஜி.ஜி… தமிழ்நாட்டில் ‘ஜூனி யர் விகடன்’ என்று பத்திரிகை – வெளிவருவதில் ஓர் ஆண்டிற்கு முன்வந்த செய்தியை – படத்துடன் வந்ததை அப்படியே தருகிறேன் – படித்துப் புரிந்து கொள்ள பாஷைத் தடை என்றாலும் கூட – படம் பார்த்துப் புரிந்து கொள்ளலாமே!
படத்திற்குப் பதில் அடுத்து வரும்போது சொல்லுகிறீர்களா? ஜி.ஜி.ஜி.!!?
பா.ஜ.க. – தாமரை தமிழ்ப் பாறையில் முளையாதுங்கோ!
பரவாயில்லை, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியைக் கட்ட வெறும் 12.35 கோடி ரூபாய் ஒதுக்கீடு – இதுவரை தகவல்! (அத்திட்டமோ ரூ. 1977.8 கோடியாக மதிப்பீடு).
அதற்குப் பதில் உங்கள் கட்சி கட்டடங்கள் 10 மாவட்டங்களில் – மாவட்டம் ஒன்றாக நடைபெற வாய்ப்பதிகம் – ஜே! ஜே! ஜே!
வேறு அரசியல் கட்சிகளில் இட நெருக்கடி – தாமரைக் கம்பெனியிலோ கூடாரம் நாளும் காலியாகி வரும் வேளையிலா இப்படி ஒரு திறப்பு விழா? அதுவும் 10 மாவாட்டங்களில் பலே! பலே!
ராசி சரியாயில்லையே என்றா கூறப் போகிறார்…! எதையும் – ரஜினி அரசியல் பிரவேசம் உறுதி உள்பட சரியாகக் ‘கணித்த’ நம் அறிவு ஜீவி ஜோஸ்யர் ஷெல்வி….
அவர் அண்ணாமலையார் ‘கருணையுடன்’ ஜாம் ஜாம் என்று தொழில் செய்பவர். எவர் விலகுவார் என்பது மட்டும் தெரியாதவர்.