அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை ஆக.31 வரை நீட்டிப்பு!

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 3- தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி அரசு, அரசு நிதி உதவி பெறும் மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்பட்டு வரும் அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளிலும் 2026-2027ஆம் கல்வியாண்டில் முதலாம் ஆண்டு, நேரடி 2ஆம் ஆண்டு (லேட்ரல் என்ட்ரி) மற்றும் பகுதிநேர டிப்ளமா படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூலை 31ஆம் தேதிவரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நேரடி மாணவர் சேர்க்கை (ஸ்பாட் அட்மிஷன்) ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நேரடி சேர்க்கையை பொறுத்த வரையில் மாணவர்கள் இணைய வழியில் விண்ணப்பிக்கத் தேவையில்லை. தேவையான கல்விச் சான்றிதழ்கள் மற்றும் இதர ஆவணங்களுடன் தாங்கள் சேர விரும்பும் அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு நேரடியாகச் சென்று அங்கு உடனடியாக சேர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *