சென்னையில் ஆக.6 மற்றும் 20இல் மூத்த குடிமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம்

1 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

சென்னை, ஆக. 3– சென்னை மேற்கு மாம்பலத்தில் ஆக.6, 20 ஆகிய தேதிகளில் மூத்த குடிமக்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம் ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ் சார்பில் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க முன்பதிவு கட்டாயம்.

சென்னை ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்காக ஆகஸ்ட் 6 மற்றும் 20 ஆகிய தேதிகளில் சென்னை மேற்கு மாம்பலத்தில் இலவச முழுமையான கண் பரிசோதனை முகாமை நடத்துகிறது.

இதில் பங்கேற்க 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள், காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, 97104 85295 என்ற எண்ணில் வாட்ஸ் அப் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த பரிசோதனையில் பார்வைத் திறன் மதிப்பீடு, கண்ணாடி பவர் பரிசோதனை (ரிஃப்ராக்ஷன்), கண்புரை (Cataract) பரிசோதனை, கண் அழுத்த நோய் (Glaucoma) பரிசோதனை, கண் உள் அழுத்தம் (IOP) அளவீடு, கண்ணின் முன்பகுதி பரிசோதனை, விழித்திரை (Retina) பரிசோதனை, உலர் கண் (Dry Eye) மதிப்பீடு ஆகியவை மேற்கொள்ளப்படும். தேவையெனில் மேம்பட்ட சிகிச்சை அல்லது அறுவை சிகிச்சைக்காக வல்லுநர் ஆலோசனை மற்றும் உரிய பரிந்துரையும் வழங்கப்படும்.

“இம்முயற்சியின் நோக்கம் கண் நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, தவிர்க்கக்கூடிய பார்வை இழப்பைத் தடுத்து, மூத்த குடிமக்கள் நல்ல பார்வையுடன் ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுவதே,” என்று ட்வின்டெக் ஹெல்த்கேர் சர்வீசஸ் இயக்குநர் அ.மகாலிங்கம் தெரிவித்துள்ளனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *