முழு சூரிய கிரகணம் 12-ஆம் தேதி நிகழ்கிறது; இந்தியாவில் காண முடியுமா?

1 Min Read

சூரியனுக்கும், பூமிக்கும் இடையேயான தொலைவை நிலவு கடந்து செல்லும்போது, நிலவின் நிழல் பூமியின் மீது விழும் நிகழ்வே, முழு சூரிய கிரகணம் என அழைக்கப்படுகிறது. அந்த வகையில் வருகிற (அதாவது ஆகஸ்டு) 12-ஆம் தேதி அரிதான முழு சூரிய கிரகணம் நிகழ்கிறது. இதனை நேரலை செய்வதாக அமெரிக்காவின் நாசா அறிவித் துள்ளது. இந்த நிகழ்வை பொதுமக்களும் கண்டு ரசிக்க, முழு சூரிய கிரகணத்தை, தனது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சமூக வலைதளப்பக்கங்களில் நேரலை செய்ய நாசா ஏற்பாடு செய்துள்ளது. கிரீன்லாந்து, அய்ஸ்லாந்து, அட்லாண்டிக் பெருங்கடல், போர்ச்சுகல், ஸ்பெயின் மற்றும் ரஷ்யாவின் வடபகுதி மக்கள், சூரியன் முழுமையான நில வால் மறைக்கப்படும் நிகழ்வை காண முடியும். அதேபோல, அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்காவின் சில நாடுகளில் இது பகுதி கிரகணமாக தெரியும்.

இந்த முழு நிகழ்வும் சுமார் 4 மணி 23 நிமிடங்களுக்கு நீடிக்கும். இந்திய நேரப்படி வருகிற 12-ஆம் தேதி இரவு இந்த முழு சூரிய கிரகணம் நடைபெறுவதால், இந்தியாவில் இருந்து இதனை காண முடியாது. இருப்பினும், நாசாவின் சமூகவலைதள நேரலை மூலம் காண முடியும் என்று நாசா விஞ்ஞானிகள் கூறினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *