கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் ‘அ.முத்துலிங்கம் இயல் விருது’ நம் ஓவியர் திரு.டிராட்ஸ்கி மருது அவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது மிகப் பொருத்தமானதாகும்.
உலக அளவில் தமிழ்ச் சமூகத்தின் நவீனக் கலை முகமாகவே டிராட்ஸ்கி மருது அவர்கள் திகழ்கிறார். அவர் என்றும் பெரியார் திடலின் வளர்ப்பு; பெரியாரியலின் வார்ப்பு!
விருது பெறும் நம் ஓவியர் திரு.டிராட்ஸ்கி மருது அவர்களுக்குத் திராவிடர் கழகத்தின் சார்பில் நமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
31.7.2026
