கட்டுமானப் பொருட்களைக் கொண்டுசெல்ல தமிழ்நாடு அரசு தளர்வு அளிக்க வேண்டும்! கேரள முதலமைச்சர் கோரிக்கை

2 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூலை 29- தமிழ்நாட்டில் இருந்து கேரளா, ஆந்திரா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு கற்கள், ஜல்லி, எம்சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்கள் அதிகளவில் கொண்டு செல்லப்பட்டன.

இந்நிலை தொடர்ந்தால் தமிழ்நாட்டில் கனிம வளங்கள் பற்றாக்குறை ஏற்பட்டு, அவற்றின் விலை உயரும். மேலும், கனிம வளங்கள் தொடர்ந்து தோண்டி எடுக்கப்படுவதால் சுற்றுச்சூழலும் கடுமையாகப் பாதிப்படையும் என்று சமூக ஆர்வலர்கள் எச்சரித்து வந்தனர்.

இதையடுத்து தமிழ்நாட்டில் இருந்து பிற மாநிலங்களுக்கு கனிமங்களை கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தற்காலிக தடை விதித்து தமிழ்நாடு அரசு அண்மையில் உத்தரவிட்டது. இந்நிலையில், இந்தத் தடையில் தளர்வு வழங்குமாறு தமிழ்நாடு அரசுக்கு கேரள முதலமைச்சர்
வி.டி.சதீஷன் கோரிக்கை விடுத் துள்ளார்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு அவர் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் இருந்து ஜல்லிக் கற்கள் உட்பட கட்டுமானப் பொருட்களை வெளி மாநிலங் களுக்கு கொண்டு செல்ல கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்ட தகவலை அறிந்தேன்.

இந்த நடவடிக்கையால் திருநெல் வேலி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு கட்டுமானக் கற்கள் வருவது பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. கேரளாவில் நடை பெறும் தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள், தமிழ்நாட்டில் இருந்து கொண்டு வரப்படும் கற்களை நம்பியே இருக்கின்றன.

எனவே, தற்போதைய தடையால் கேரளாவில் நடைபெற்றுவரும் பல தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டு, அவை தாமத மடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் திட்டங்கள் கேரளாவுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தென் மண்டலத்தின் பொருளாதார வளர்ச்சி, பிராந்திய இணைப்பு, சரக்குப் போக்குவரத்து மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக்கும் முக்கிய மானவை.

குறிப்பாக, விழிஞ்சம் பன்னாட்டு துறை முகத்தையும், வல்லார்பாடம் பன்னாட்டு கண்டெய்னர் முனையத்தையும் இணைக்கும் தடையற்ற போக்குவரத்தின் மூலம் தென்னிந்தியாவின் பொருளாதார வளர்ச்சியும் போட்டித்தன்மையும் அதிகரிக்கும்.

இயற்கை வளங்களை நிலையாகப் பாதுகாக்கும் தமிழ்நாடு அரசின் கொள்கை நோக்கங்களை கேரளா பாராட்டுகிறது. அதேநேரம், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உள்கட்டமைப்புத் திட்டங்களின் நியாயமான தேவையைக் கருத்தில்கொண்டு ஒருசமநிலையான அணுகுமுறையை உருவாக்கினால், உங்கள் கொள்கையிலும் பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

எனவே, கேரளாவில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை மற்றும் முக்கிய உள்கட்டமைப்புப் பணிகளுக்கு பிரத்யேகமாகத் தேவைப்படும் ஜல்லிக் கற்களை மட்டும் தடையின்றி கொண்டு செல்ல வசதியாக, உரிய தளர்வு அல்லது சிறப்பு நடைமுறையை ஏற்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *