பல்கலைக்கழகங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப aவிரைவில் நடவடிக்கை!

1 Min Read

சென்னை, ஜூலை 28- மாநில பல்கலைக் கழகங்களின் பதிவாளர்களுடனான ஆலோசனைக் கூட்டம் உயர்கல்வி அமைச்சர் பி.விஸ்வநாதன் தலைமையில் நடந்தது. இக்கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலர் தீரஜ்குமார், மாநில உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் எம்.பி.விஜயகுமார், பல்கலைக்கழகங்களின் பதிவாளர்கள் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில், உயர் கல்வி நிறுவனங் களின் நிர்வாகத்திறனை மேம்படுத்துவது, உயர்கல்வி தரத்தை உயர்த்துவது, பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும், பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடங்களையும் விரைந்து நிரப்ப நடவடிக்கை எடுப்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

மேலும், பாடத்திட்ட குழுக்களை உரிய காலத்தில் மறுசீரமைப்பு செய்வது, விளைவு அடிப்படையிலான கல்விமுறை, பருவகாலத் தேர்வுகளை குறிப்பிட்ட காலத்தில் நடத்தி தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவது, மாணவர்களுக்கான கல்விச் சேவைகளை இணையவழியில் விரிவுபடுத்துவது, ஆய்வகம் மற்றும் வளாக உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *