சென்னை, ஜூலை 25– டில்லியில் நீட் தேர்வுக்கு எதிராக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் நடத்தி வரும் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பயணத் திட்டங்கள் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
சென்னை மற்றும் புதுச்சேரி பயணத் திட்டம்
அமித்ஷா 2 நாள் பயணமாகத் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வர திட்டமிட்டிருந்தார். கருநாடக மாநிலம் ஹூப்ளியில் இருந்து தனி விமானம் மூலம் காலை 11.20 மணிக்குச் சென்னை வந்து, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.
புதுச்சேரியில் இருந்து நாளை காலை 11.30 மணிக்குச் சென்னை திரும்பி, விமான நிலையத் தில் சிறிது நேரம் ஓய்வெடுத்த பின் தனி விமானத்தில் மீண்டும் சென்னை வந்து டில்லி திரும்புவதாக இருந்தது.
சென்னை விமான நிலையத்தில் பாஜக தமிழ்நாடு பிரமுகர்கள் மற்றும் ஒன்றிய அரசின் திட்ட அமலாக்கம் தொடர்பாக ஒப்பந்த நிறுவன அதிகாரிகளைச் சந்திக்கும் திட்டம் இருந்த்து
அமித்ஷா வருகையை முன்னிட்டுச் சென்னை பழைய விமான நிலை யத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமாகச் செய்யப்பட்டு வந்தன. மேலும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
டில்லியில் கடந்த 4 நாட்களாக நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அங்கு காவல்துறை மற்றும் துணை ராணுவப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதோடு, பாதுகாப்பு கருதி மெட்ரோ ரயில் நிலையங் கள் தற்காலிகமாக மூடப் பட்டு, நகரம் முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.
நாட்டின் தலைநகரில் நிலவும் இந்தப் பாதுகாப்புச் சூழலைக் கருத்தில் கொண்டு, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை மற்றும் புதுச் சேரி வருகை ரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரி கள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதனைத் தொடர்ந்து, சென்னையில் நடைபெற விருந்த பாதுகாப்பு குறித்த ஆலோசனைக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
