சென்னை,மார்ச்14- தமிழ்நாட்டில் தற்போது வேலை வாய்ப்பு அலுவலகத்தில் மொத்தம் எத்தனை பேர் பதிவு செய்துள் ளனர் என்ற விவரத்தை வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வெளியிட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி நிலவரப்படி, 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் 18 லட்சத்து 74 ஆயிரத்து 522 பேரும், 19 முதல் 30 வயது வரை உள்ள பல தரப்பட்ட கல்லூரி மாணவர்களை பொறுத்த வரையில் 28 லட்சத்து 9 ஆயிரத்து 940 பேரும் பதிவு செய்து உள்ளனர்.
31 முதல் 45 வயது வரை அரசுப்பணி வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 217 பேர். 46 முதல் 60 வயது வரை வயது முதிர்வு பெற்ற பதிவுதாரர்கள் 2 லட்சத்து 30 ஆயிரத்து 976 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 5 ஆயிரத்து 811 பேரும் வேலைக்காக பதிவு செய்து காத்து இருக் கின்றனர்.
மாற்றுத்திறனாளிகளை பொறுத்தவரையில் கை, கால் குறைபாடுடையோர் ஆண்கள் 72 ஆயிரத்து 983 பேரும், பெண்கள் 37 ஆயிரத்து 843 உள்பட ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 826 பேரும், பார்வையற்ற ஆண்கள் 12 ஆயிரத்து 47 பேரும், பெண்கள் 5,449 பேர் உள்பட 17 ஆயிரத்து 496 பேரும் பதிவு செய்து காத்திருக்கின்றனர்.
கை, கால் குறைபாடுடையோர் 74,230 ஆண்கள், 38,378 பெண்கள் என மொத்தம் 1,12,608 பேரும். காதுகேளா தோர் மற்றும் வாய் பேசாதோரில் ஆண் கள் 9 ஆயிரத்து 513 பேர், பெண்கள் 4 ஆயிரத்து 534 பேர் உள்பட 14 ஆயிரத்து 47 பேர் பதிவு செய்துள்ளனர்.
விழிப்புலனிழந்தோர் ஆண்கள் 12,218 பேர், பெண்கள் 5548 பேர் என 17,766 பேர், அறிவுதிறன் குறைபாடு மற்றும் இதர குறைபாடுடையோர் ஆண்கள் 1,044 பேர், பெண்கள் 349 பேர் என 1393 பேர் பதிவு செய்துள்ளனர்.
அதேபோல், பட்டதாரி ஆசிரி யர்கள் 3 லட்சத்து 39 ஆயிரத்து 996 பேரும், முதுகலை பட்டதாரி ஆசிரி யர்கள் 2 லட்சத்து 49 ஆயிரத்து 826 பேரும், இளநிலை பொறியியல் படித்தவர் 2,92,396 பேரும், முதுநிலை பொறியியல் படித்தவர்கள் 2,58,662 பேரும் என மொத்தம் 67 லட்சத்து 55,466 பேர் பதிவு செய்து காத்துள்ளனர். இவர்களில் 31 லட்சத்து 47,605 பேர் ஆண்கள். 36 லட்சத்து 7,589 பேர் பெண்கள். 272 பேர் 3ஆம் பாலினத்தவராவர்.