தருமபுரி, மார்ச் 14- திராவிட வீராங்கனை அன்னை மணியம்மையாரின் 104ஆவது பிறந்தநாள் முன்னிட்டு, 10.3.2023 அன்று மகளிர் சந்திப்பு நிகழ்ச்சி தருமபுரி பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.
அன்னை மணியம்மையாரின் படத்திற்கு மாலை அணிவித்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் நிகழ்வு தொடங்கப்பட்டது.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, அன்னை மணியம்மையார் அவர்களின் படத்திற்கு மாலை அணிவித்தும், மண்டல மகளிர் பாசறை செயலாளர் பெ.கோகிலா, விடுதலை வாசகர் வட்ட செய லாளர் சுதா ஆகியோர் இணைந்து தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும், மரியாதை செய்தனர்.
தருமபுரி மண்டல தலைவர் அ.தமிழ்ச் செல்வன், விடுதலை வாசகர் வட்ட செய லாளர் ம.சுதா, திராவிட விவசாய அணி அமைப்பாளர் ஊமை காந்தி , டைலர் பாஷா, சிவாடி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித் தனர்.
தருமபுரி மண்டல மகளிர் பாசறை செய லாளர் பெ.கோகிலா வாழ்த்து முழக்கங்களை எழுப்பினார் ..
மகளிரணி அமைப்பாளர் அருணா பீமன், சிவாடி செல்வி சேட்டு, மகேந்தரி, ராஜசுந்தரி, நந்தினி, சரிதா, தவ.முனியம்மாள், தெய் வானை, மாதம்மாள், பழனியம்மாள், சின்ன வள், ஜெயலட்சுமி, உமா சேட்டு, செவத்தா, லட்சுமி மற்றும் பெரியார் பிஞ்சுகள் வி.சுஜிதா, கா அஸ்விகா, கா.சர்வேஸ்வரன்ஆகியோர் கலந்து கொண்டனர்.
அன்னை மணியம்மையாரின் சிறப்பு களை குறித்தும், நடைபெற்றுக் கொண்டிருக் கின்ற திராவிட மாடல் ஆட்சி பெண்ணுரிமை ஆட்சியாக விளங்குவது குறித்தும் மண்டல மகளிர் பாசறை செயலாளர் பெ.கோகிலா சிறப்பாக உரையாற்றினார்.
“யார் மீது தவறு” என்ற சிறுகதை சொல்லி, ஒரு விவாத களத்தை தகடூர் தமிழ்ச்செல்வி துவக்கி வைத்தார். விவாதத்தில் அருணா பீமன், தவ முனியம்மாள், பெ.கோகிலா செல்வி சேட்டு ஆகியோர் கலந்து கொண்டு கருத்துக்களை தெரிவித்தனர்.
பெரியார் பிஞ்சு கா.அஸ்விகா, தமிழ்த்தாய் வாழ்த்து அருமையாக பாடினார். பாரதிதாசன் கவிதைகளை தவ முனியம்மாள் வாசித்தார்.
“அன்னை மணியம்மையார் வாழ்க” என்று எழுதப்பட்ட பலூன்களை பறக்க விட்டு, பெரியார்பிஞ்சுகள் விளையாடி மகிழ்ந் தனர்.
கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டு பிறந்தநாள் விழா நிறைவடைந்தது.