காஞ்சிபுரம், மார்ச் 14- பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பெரியார் சிந்தனை உயராய்வு மய்யமும் பெரியார் பிஞ்சு இதழும் இணைந்து நடத்திய பெரியார் 1000 வினா-விடை போட்டிகளில் காஞ்சிபுரம் மாவட் டத்தில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர் களுக்கு பரிசளிப்பு விழா 11.03.2023 அன்று காலை 10.30 மணி முதல் 12 மணிவரை காஞ்சிபுரம் பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக தலைவர் அ.வெ.முரளி நிகழ்ச்சியினை சிறப்பாக ஏற்பாடு செய்து தலைமை வகித்து ஒருங் கிணைத்து நடத்தினார்.
காஞ்சிபுரம் மாவட்ட கழக இணை செய லாளர் ஆ.மோகன் வரவேற்புரை ஆற்றினார்.
அறிவு வழி மன்ற நிறுவனர் நாத்திகம் நாக ராஜன், செங்கல்பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம், காஞ்சிபுரம் மண்டல தலைவர் பு.எல்லப்பன் ஆகியோர் முன்னிலை வகித்து காஞ்சிபுரம் மாவட்ட கழகத்திற்கும், பங்கேற்ற மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், பெற் றோர்களுக்கும் பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்து இன்றைய காலகட்டத்தில் பெரியாரின் தேவை குறித்தும் கருத்துரை ஆற்றினர்.
காஞ்சிபுரம் மாநகர மேயர் மகாலட்சுமி யுவராஜ் பங்கு பெற்ற மாணவர்களுக்கு சான் றிதழ் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
காஞ்சிபுரம் மாநகர துணை மேயர்
ஆர். குமரகுருநாதன் பங்கு பெற்ற மாணவர் களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார். மாநில பத்திர எழுத்தர் ந. சிதம்பர நாதன் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங் களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கி வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்ட அளவில் ரொக்கப் பரிசு பெற்ற வர்கள்:
முதல் பரிசு: கே.பத்ரி
அகத்தியர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வாலாஜாபாத்
இரண்டாம் பரிசு:
1. அஷ்நேகா
மிஸ்ரிலால் சவுகார் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
2. என் எஸ் நவியா
விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
மூன்றாம் பரிசு:
ஜி.மகேஸ்வரி
விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
இந்நிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக
ச வேலாயுதம், மாநகர திராவிடர் கழக தலைவர்,
வி.கோவிந்தராசு, மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி,
எஸ்.செல்வம், எ.ரேவதி, மு.குறளரசு, மு.குழலரசி , மு.எழிலரசி, ஆசிரியர் மகேசுவரன் மற்றும் பள்ளி தாளாளர்கள் முதல்வர்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அனைவருக்கும் காஞ்சிபுரம் மாவட்ட கழக செயலாளர் கி. இளையவேள் நன்றியுரை கூறி னார்.