பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 124ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழா!

1 Min Read

திருச்சி, ஜூலை 22–- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 15.07.2025 (செவ்வாய்க்கிழமை) காலை 9.00 மணியளவில், பச்சைத் தமிழர் காமராசர் அவர்களின் 124ஆவது பிறந்தநாள் விழா மற்றும் கல்வி வளர்ச்சி நாள் விழாவானது சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

மொழி வாழ்த்துடன் தொடங்கிய நிகழ்வில் பள்ளியின் முதல்வர் முனைவர். க.வனிதா காமராசரின் படத்திற்கு மாலை அணிவித்து, மலர்கள் தூவி மரியாதை செலுத் தினார்.

தொடர்ந்து பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவிகள், எஸ்.சிறீஆருஷி “காமராசரின் களங்கமில்லா வாழ்வு” என்ற தலைப்பில் சிறப்புரையும், மாணவி பி.பரிமளசிறீ “தியாகத் திருவுருவம் காமராஜர்” என்ற தலைப்பில் கவிதையும் 10ஆம் வகுப்பு மாணவி மு.சுரேகா “நேர்மைக்கு முன்னுதாரணம் காமராசர் என்ற தலைப்பில் சிறப்புரையும் வழங்கினர்.

நிகழ்வின் சிறப்பாகத் தந்தை பெரியார், காமராசர் இருவரும் இன்றைய சூழலில் சந்தித்தால் எப்படி இருக்கும் என்ற கற்பனை நாடகத்தில் பள்ளியின் 11ஆம் வகுப்பு மாணவர்கள் டி.பி.டேனி ஜோஸ் மற்றும் டி.சிறீஜித் ஆகியோர் தத்ரூபமாக நிகழ்த்திக் காட்டியது மிகவும் உணர்வுப்பூர்வமான வகையில் இருந்தது.

பள்ளியின் யூ.கே.ஜி மாணவர் எஸ்.ஆல்வின் மற்றும் பி.குரு பிரசாத் ஆகியோர் காமராசரின் பொன்மொழிகளைத் தங்கள் மழலை மொழியில் கூறியதும், 1ஆம் வகுப்பு மாணவர் எம்.எஃப்.ஹபிபுர் ரகுமான் காமராசரின் வாழ்க்கை வரலாறு குறித்த உரையும் பலத்தக் கைத்தட்டலைப் பெற்றது.

மேலும், காமராசர் குறித்த பாடல், பொன்மொழிகளையும் மாணவர்கள் குழுவாக வழங்கினர்.

தொடர்ந்து, பள்ளியின் தமிழ் இலக்கிய மன்றம் சார்பில், அதன் பொறுப்பாசிரியர் மு.ராகினி ஒருங்கிணைப்பில் நடத் தப்பட்ட கல்வி வளர்ச்சி நாள் போட்டிகளில் பொன்மொழி ஒப்புவித்தல், கையெழுத்துப் போட்டி, பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர் களுக்கு பள்ளி முதல்வர் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். நிறைவாக நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *