இந்நாள் – அந்நாள்

1 Min Read

அறிவியலாளர் மார்க்கோனி நினைவுநாள் இன்று (20.7.1937)

இத்தாலியில் உள்ள போலோக்னா நகரில் 25.4.1847- இல் பிறந்தார் மார்க்கோனி. இவருடைய முழுப்பெயர், மார்சீஸ் கக்லி எல்மோ மார்க்கோனி.

மார்க்கோனி 1905 ஆம் ஆண்டில் பியட்ரைஸ் என்ற பெண்ணைத் தனது வாழ்க்கைத் துணையாக்கிக் கொண்டார். தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சிக்கு இடையூறாக இருந்த அவரை விவாகரத்துச் செய்துவிட்டு, 1927 இல் மரியா கிறிஸ்டினா என்பவரை மார்க்கோனி திருமணம் செய்துகொண்டார்.

இரண்டாவது மனைவியின் நல்ல ஒத்துழைப்பால் மார்க்கோனி பல கருவிகளைக் கண்டுபிடித்து உலகுக்கு வழங்கினார். செய்தி பரப்பும் கம்பியில்லாத் தந்தி சாதனத்தைக் கண்டுபிடிக்க தனது மனைவி பெரும் உதவியாக இருந்ததாக மார்க்கோனி தான் எழுதிய ஆரய்ச்சி நூல் ஒன்றில் குறிப்பிட்டிருக் கிறார்.

இவர் கண்டுபிடித்த கருவி மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து வானொலிச் செய்திகள் 1899 இல் அனுப்பப்பட்டன. அதேபோல் அட்லாண்டிக் பெருங்கடலைக் கடந்து வானொலிச் செய்திகள் 1901 ஆம் ஆண்டு வெற்றிகரமாக அனுப்பப்பட்டன.

மார்க்கோனிக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு 1909 ஆம் ஆண்டு வழங்கி சிறப்பிக்கப்பட்டது. நிறைய விருதுகள், பரிசுகள், சிறப்புப் பட்டங்களையும் பெற்ற பெருமை இவருக்கு உண்டு.

ரோம் நகரில், தன் 63 ஆம் வயதில் (20.7.1937) அம்மை நோயால் அவதியுற்று மறைவுற்றார் மகத்தான விஞ்ஞானி மார்க்கோனி.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *