என்னை கட்சியிலிருந்து நீக்கியது சட்ட விரோதம்! த.வெ.க.வில் இருந்து நீக்கப்பட்ட ஞானசவுந்தரி பேட்டி

1 Min Read

விழுப்புரம், ஜூலை 20– வழக்குரைஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறை கேட்டில் ஈடுபட்டதாக வழக்கு தொடர்ந்த ஞானசவுந்தரி கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இந்நிலையில், ஞானசவுந்தரி விளக்கம் அளித்துள்ளார்.

ஞானசவுந்தரி விளக்கம்

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பாதவது:- என்னை கட்சியை விட்டு நீக்க விழுப்புரம் மாவட்ட செயலா ளருக்கு அதிகாரம் இல்லை. அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கியது சட்டவிரோதம். முதலமைச்சர் ஜோசப் விஜய் ஊழலற்ற நிர்வாகத்தை வலியுறுத்து கிறார். அந்த கொள்கையால் தான் நீதிமன்றத்தை நாடினேன்” என அவர் விளக்கம் அளித்துள்ளார். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

நீக்கம் ஏன்?

வழக்குரைஞர் நியமனத்தில் அமைச்சர் ஆனந்த் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும், தம்மை விழுப்புரம் மாவட்ட வழக்குரைஞராக நியமிக்க கோரியும் உயர்நீதிமன்றத்தில் ஞானசவுந்தரி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீதான விசாரணையின் முடிவில் ஞானசவுந்தரியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், எதிரிகளுடன் சேர்ந்து கொண்டு பொய்யான குற்றச்சாட்டுகள் கூறியும், கட்சியின் கொள்கைகள், கட்டுப் பாடுகளுக்கு முரணாக செயல்பட்ட ஞானசவுந்தரி அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்படுவதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட தவெக செயலாளர் அறிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *