திருப்பத்தூர்,மார்ச்15- திருப்பத்தூர் அருகே அடுத்தடுத்து இரண்டு கோயில்களில் தங்க நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப் பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
திருப்பத்தூர் அடுத்த சின்ன கன்னாலபட்டி, கலப்புகாரவட்டம் பகுதியில் உள்ள தேசத்து மாரியம் மன் கோவிலில் வழக்கம் போல் பூஜை முடிந்து மாலை நேரத்தில் பூசாரி கோவிலை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார்.
இதனை நோட்டமிட்ட சிலர் இரவு கோவிலின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து அம்மன் கழுத்தில் இருந்த இரண்டு பவுன் தங்க நகை மற்றும் இரண்டு வெள்ளி குத்து விளக்குகள், கோவி லில் உண்டியலில் இருந்த 30 ஆயிரம் மதிப்பிலான பணம் உள்ளிட்டவற்றை கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர். மேலும் கோவில் உண்டியலை கோவிலில் இருந்து சுமார் 100 அடி தொலை வில் உள்ள வாழைத் தோப்பில் உண்டியலை வீசி சென்றுள்ளனர்.
அதேபோல் அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள செம்மினிகொல்லிமேடு பகுதியில் உள்ள ஓம்சக்தி கோவி லில் புகுந்து ஒரு பவுன் தங்கச் சங்கிலி, வெள்ளி மற்றும் பூஜைக்கு பயன்படுத்தும் வெண்கலப் பொருட்களையும் கொள்ளை யடித்துச் சென்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதி கோயில்களில் கொள்ளை யடிக்கும் சம்பவங்கள் தொடர் கதையாக உள்ளதால், இதனை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.