பக்தி வந்தால் புத்தி போய்விடும்…

2 Min Read

கடந்த சில நாட்களுக்கு முன் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் பார்த்திபனூர் அருகில் உள்ள எம். நெடுங்குளம் கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்குச் சென்று இருந்தேன். அந்த நிகழ்ச்சி நடைபெறும் இடத்தின் மிக அருகே பெரிய பெரிய அரச மரங்கள் இருந்தன. அதன் கீழேயே சிறீ பூர்ண புஷ்கலா சமேதாய அணியார் உடைய அய்யனார் கோவில் இருந்தது.

நான் சென்றிருந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிப்பதற்காக அந்த அரச மரத்தின் நிழலில் தஞ்சமடைந்திருந்தனர். மேலும், அந்த கோயிலில் நடைபெற்ற காதுகுத்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் அந்த இடத்தில் கூடியிருந்தனர். அந்த கூட்டத்தினை தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த பொழுது பிரம்மாண்டமான குதிரையின் மீது அய்யனார் உட்கார்ந்து இருப்பது போன்று சிலை வடிக்கப்பட்டு இருந்தது அந்தச் சிலையின் கீழே மேலும் பல சிறிய சிலைகள் வடிக்கப்பட்டிருந்தன.

அங்கு ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் தங்களுடைய கைப்பேசி மூலம் செல்பி என்ற தற்படம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

சிறிது நேரத்திற்கு பின்பு அந்த இடத்தில் கூடியிருந்த கூட்டம் கணிசமாகக் குறைந்த பிறகு நானும் அங்கு சென்று என்ன என்று பார்க்கலாம் என்று பார்த்தபோது அங்கிருந்த கல்வெட்டில் 2019ஆம் ஆண்டு இந்த கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்று இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் நன்கொடை வழங்கிய அவருடைய பட்டியலிலும் இடம்பெற்றிருந்தது.

பின்பு நான்  அங்கிருந்த சிலைகளைப் பார்க்கும் போது சற்று சங்கடமும் திடுக்கிடவும் வைத்தது. ஏனென்றால், அங்கு தத்ரூபமாக வடிக்கப்பட்டு இருந்த சிலைகளில் ஆண் சிலைகள் பெண் சிலைகளும் இருந்தன. அதோடு மட்டுமல்லாமல் சிலைகளுக்கு பல்வேறு வண்ணங்கள் தீட்டப்பட்டிருந்தது. ஆண்கள் சிலைகள் அனைத்தும் வண்ண வண்ண மேலாடை கீழாடைகள் அணிந்திருந்தனர். பெண்கள் சிலைகளில் ஓர் இரு சிலைகளைத் தவிர மற்ற சிலைகள் எல்லாமே முழு நிர்வாணமாக வடிக்கப்பட்டு இருந்ததுடன்.சிலையின் அங்கங்களுக்கு தனியாக காட்டும் வகையிலும் வண்ணம் தீட்டப்பட்டிருந்தது.

இந்த சிலையில் உள்ள ஆபாசம், அருவருப்பு, அசிங்கம் பற்றி சிறிது கூட, சிந்திக்காமல், யோசனை செய்யாமல் ஆண்கள், பெண்கள், முதியவர்கள், சிறுவர்கள் என வேறுபாடு இல்லாமல் அந்த சிலையின் அருகில் நின்று கைப்பேசியில் குடும்பத்துடனும் தனியாகவும் படம் எடுத்துக் கொண்டது பார்க்கும் போது வேதனையும், ஆத்திரமும் ஏற்பட்டது.

அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள் சொன்ன தத்துவமான ‘பக்தி வந்தா புத்தி போய்விடும்’ என்ற ஆழமான தொலைநோக்கு பார்வையுடன் கூடிய கருத்து எனது மன ஓட்டத்தில் வந்து சென்றது.

இதனை வெளிப்படுத்த ஆதாரம் வேண்டுமே என நினைத்து வேறு வழியின்றி எனது கைப்பேசியிலும் அந்த அசிங்கத்தை படம் பிடித்துக் கொண்டு அங்கிருந்து புறப்பட்டேன்.

– எஸ்.சித்தார்த்தன், மன்னார்குடி

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *