திருச்சி, ஜூலை 16– திருச்சி, பெரியாார் மணியம்மை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளான கல்வி வள்ளல் காமராஜர் அவர்களின் 124ஆவது பிறந்த நாள் விழா தலைமையாசிரியை, இருபால் ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக கொண் டாடப்பட்டது.
மொழி வாழ்த்துடன் இனிதே தொடங்கிய விழாவின் முதல் நிகழ்வாக 11ஆம் வகுப்பு மாணவி பா. அன்னப்பூரணி விழாவிற்கு குழுமி இருந்த அனைவரையும் வரவேற்று உரை நிகழ்த்தினார். காமராஜரின் திருவுருவப்படத்திற்கு பள்ளியின் தலைமையாசிரியை, இருபால் ஆசிரியர்கள் இணைந்து மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். 9ஆம் வகுப்பு பயிலும் மாணவி கு. முத்து நந்தனா காமராஜரின் கல்வி பணி சமுதாயத் தொண்டு ஆகியவற்றை தெள்ளத்தெளிவாக எடுத்துக்கூறி உரை நிகழ்த்தினர். காமராஜர் மக்களுக்காகவே வாழ்ந்த தலைவர் என்பதை நாடகம், கவிதை மற்றும் பாடல் வழியாகவும் விளக்கி கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளித்தனர். பின்பு காமராஜர் பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியர்களுக்கு தலைமையாசிரியரால் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவத் தலைவியை தேர்ந்தெடுக்க தேர்தல் முறை ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இத் தேர்தலில் மாணவிகள் தங்களது வாக்குகளைப் பதிவு செய்து, மாணவத் தலைவி மற்றும் துணைத் தலைவியைத் தேர்வு செய்வதுடன், தேர்தல் நடைமுறை மற்றும் வாக்குப்பதிவு குறித்த விழிப் புணர்வையும் பெறுகின்றனர்.
விழாவின் முக்கிய நிகழ்வாக பள்ளி மாணவத் தலைவி, துணைத்தலைவி, நான்கு அணிக் களுக்கான (House Captain & Vice Captain) , NCC, NSS, NGC,JRC, & Guide ஆகிய இயக்கங்களுக்கான தலைவி, துணைத்தலைவி மற்றும் தமிழ், ஆங்கிலம், கணிதம், வான வில் மற்றும் சமூகஅறிவியல் மன் றங்களுக்கான செயலாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, பள்ளி தலைமையாசிரியர் பதவி பிரமா ணம் செய்து வைத்து பேட்ஜ் அணிவித்தார். பதவியேற்ற மாண விகள் தங்களது பணி மற்றும் கடமைகள் குறித்த உறுதிமொழியுடன் பதவி ஏற்றுக்கொண்டனர். இறுதி யாக 11ஆம் வகுப்பு மாணவி கு. ஆயிஷா ஜினீரா நன்றி நவில நாட்டுப்பண்ணுடன் விழா இனிதே நிறைவுற்றது.
