சோழிங்கநல்லூர், ஜூலை 14- 12.7.2026 அன்று காலை 10 மணிக்கு சோழிங்கநல்லூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட இளைஞரணித் தலைவர் நித்தியானந்தம் தலைமையில், மாவட்ட கழகப் புரவலர், தமிழ்நாடு மூதறிஞர் குழு தலைவர் டாக்டர் சுவாமிநாதன் தேவதாஸ் முன்னிலையில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு கடவுள் மறுப்பு மற்றும் நோக்க உரையை வழங்கினார்.
கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளர் தமிழினியன் உள்ளிட்ட கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் நமது கழகத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.
முடிவாக கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
19/07/2026 ஞாயிற்றுக்கிழமை மாலை 6:00 மணிக்கு பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் நடைபெறும் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுதிய “ஆர் எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா அரங்கக் கூட்டமாக மாவட்டத் பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவர் த.ஆனந்தன் கூட்ட அரங்கத்தில் மிகவும் சிறப்பாக நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
நமது கழகத்தின் மீதும் தந்தை பெரியார், ஆசிரியர் அவர்கள் மீதும் பற்று கொண்டவர்களை நமது கழகத்தில் உறுப்பினர்களாக சேர்க்க பல வழிகளில் முயற்சி செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
நமது மாவட்ட கழகத்தின் சார்பில் ஆசிரியர் அவர்களின் தேதி வாங்கி பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடத்த வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.
கூட்டத்தில் டாக்டர் சுவாமிநாதன் தேவதாஸ், புலவர் சங்கரலிங்கம், வி.கே.ஆர்.பெர்னார்ட், நிவேதன், ஆர்கலைச்செல்வன், பி.சி.ஜெயராமன், மணிகண்டன், பி.குமார், நித்தியானந்தம், தமிழினியன் மற்றும் வேலூர் பாண்டு ஆகியோர் கலந்து கொண்டனர்.
