பருவநிலை மாற்றத்தால் அமர்நாத் குகை பனிலிங்கம் உருகியது “கடவுள் அல்ல, இயற்கை நிகழ்வே”

சிறீநகர், ஜூலை 12 காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகை கோயிலில் ஆண்டுதோறும் உருவாகும் ‘பனிலிங்கம், இந்த ஆண்டு பருவநிலை மாற்றம் மற்றும் வெப்பம் அதிகரித்ததால் விரைவில் உருகி விட்டது’ என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயற்கையாக பனிக்கட்டி உருவாகி, உருகும் இந்த நிகழ்வை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசிக்கின்றனர்.

பகுத்தறிவுப் பார்வை

அறிவியலாளர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் இது தொடர்பாக கூறுவது, “இது கடவுளின் அடையாளம் அல்ல. ‘வெப்பநிலை குறைவாக இருக்கும்போது உருவாகி, வெப்பம் அதிகமானால் உருகிவிடும் இயற்கையான பனிக்கட்டி’ மட்டுமே. சூடு வந்தால் எந்த பனிக்கட்டியும் உருகும் என்பது அடிப்படை அறிவியல்.”

உலகம் முழுவதும் பனிப்பாறைகள் உருகுவதை போல, அமர்நாத்திலும் பருவநிலை மாற்றத்தின் தாக்கம் வெளிப்படையாக தெரிகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

எனவே இதனை மூடநம்பிக்கையுடன் அல்லாமல், ‘இயற்கை நிகழ்வாகவும், பருவநிலை மாற்றத்திற்கான எச்சரிக்கையாகவும்’ பார்க்க வேண்டும் என பகுத்தறிவு கருத்தாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *