விருதுநகர் மாவட்டக் கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!

1 Min Read

ஆகஸ்ட் 20இல் இராசபாளையத்தில் ‘எதிர்நீச்சலில்
வென்ற பெரியார்’ – 80ஆம் ஆண்டு விழா மாநாடு!
நீட் எதிர்ப்பு: பயண வீரர்களுக்கு எழுச்சிமிகு வரவேற்பு!

 

இராஜபாளையம், ஜூலை 12- 11.7.2026 சனிக்கிழமை காலை 11 மணிக்கு இராசபாளையம் பெரியார் மய்யத்தில், விருதுநகர் மாவட்ட திராவிடர் கழக கலந்து றவாடல் கூட்டம் உற்சாகமாக நடைபெற்றது.

மாவட்டச் செயலாளர் தி.ஆத வன் வரவேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவுரையாற்றினார்.

மாவட்டத் தலைவர் இல.திருப்பதி தலைமையேற்று, 93 அகவையில் 83ஆண்டுகால பொதுவாழ்வு கொண்ட தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், அறிவாசான் தந்தை பெரியார் அவர்களுக்கு இராசபாளையத்தில் ஏற்பட்ட எதிர்ப்புகளையும், துரோகங்களையும் தகர்ந்தெரிந்து தந்தை பெரியாரே எம் தலைவர் என்று வாழ்ந்து மறைந்த தன்மான வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் 20.8.2026 அன்று இராசபாளையத்தில் மாநாடு நடத்துவதற்கு வாய்ப் பளித்துள்ளார்கள். அனைத்து தோழர்களும் உற்சாகமாக பணியாற்றி மாநாட்டை எழுச்சியோடு நடத்துவோம் என செயலாக்கவுரை வழங்கினார்.

மாவட்ட துணைத் தலைவர்கள் பூ.சிவக்குமார், கா.நல்லதம்பி, மாவட்ட துணைச் செயலாளர் இரா.பாண்டிமுருகன், மாவட்ட ப.க செயலாளர்  கோ.பெத்தய்யா, மாவட்ட ப.க. அமைப்பாளர்  வழவை முத்த ரசன், திருவில்லிப்புத்தூர் நகர தலைவர் இரா.கோவிந்தன், ஒன்றிய அமைப்பாளர் கு.போத்திராஜ், சிவகாசி நகர தலைவர் மா.முருகன்,  ஒன்றிய செயலாளர்  பெ.கண்ணன் ஆகியோர் தமது பங்களிப்பையும் அறிவித்து, நன்கொடை திரட்டித் தருவோம் பெருமகிழ்வுடன் கருத்துரைத்தார்கள்.

விருதுநகர் குறள் நெறிக் கழகத் தலைவர், செந்தமிழ்க் காவலர், சுயமரியாதைச் சுடரொளி பேரா.க.திருமாறன் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

20.8.2026 அன்றுமாலை இராச பாளையத்தில் எதிர்நீச்சலில் வென்ற பெரியார் 80-ஆவது ஆண்டு விழா மாநாட்டினை எழுச்சியோடுநடத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது.

இராசபாளையத்தில் மாநாடு நடத்த வாய்ப்பளித்த தமிழர் தலைவருக்கு மாவட்டக் கழகம் நன்றி தெரிவித்துக் கொண்டது.

நீட்எதிர்ப்பு மோட்டார் சைக்கிள் மூலம் பரப்புரை மேற்கொண்டு 31.7.2026 அன்று வருகை தரும் குழுவினருக்கு சிறப்பான வரவேற்பளித்து பங்கேற்பதென முடிவு செய்யப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *