ஆசிரியர்கள் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

2 Min Read

சென்னை, ஜூலை 9– பணியில் உள்ள ஆசிரியர் களுக்கு நடத்தப்பட்ட சிறப்பு தகுதித் தேர்வு (டெட்) முடிவுகளை வெளி யிட கூடாது என்று இடைக் காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, பணியில் உள்ள ஆசிரி யர்களும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அய்ந்து ஆண்டுகளில் பணி ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்களுக்குத் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான காலக் கெடுவை மேலும் 3 ஆண்டு களுக்கு நீட்டித்து உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில், பிற்படுத் தப்பட்ட, மிகவும் பிற் படுத்தப்பட்ட, சீர் மர பினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்களை 55-இல் இருந்து 50 சதவீதமாகவும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண் களை 45-இல் இருந்து 40 சதவீதமாகவும் குறைத்து தமிழ்நாடு அரசு கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்பித்தது.

இதேபோல் பொதுப் பிரிவினருக்கான குறைந்த பட்ச மதிப்பெண்களை 60-இல் இருந்து 50 சதவீத மாக குறைக்க கோரி பொதுப் பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்ளிட்ட 3 ஆசிரியர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அதில், பீகாரில் பொதுப்பிரிவினருக்கு குறைந்த பட்ச தேர்ச்சி மதிப்பெண்கள் 50 சதவீதமாக நிர்ணயிக்கப்பட் டுள்ளது. இதேபோல தமிழ் நாட்டிலும் பொதுப் பிரிவினருக்கான மதிப் பெண்களைக் குறைக்க உத்தரவிட வேண்டும்.

ஏற்கெனவே முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க பொதுப்பிரிவு ஆசிரியர் களுக்கு 50 சதவீத மதிபெண்கள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அவர்கள் கோரியிருந்தனர்.

பணியில் உள்ள ஆசிரி யர்களுக்கான சிறப்பு தகுதித் தேர்வு நடந்து முடிந்துள்ள நிலையி்ல், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்னிலையில் நேற்று (8.7.2026) விசா ரணைக்கு வந்தது. அப்போது, பொதுப்பிரிவு ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களைக் குறைப்பது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுக்கவுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப் பட்டது.இந்த கொள்கை முடிவை நீதிமன்றத்தில் தெரிவிக்க ஏதுவாக வழக்கு விசாரணையை ஜூலை 24-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ள நீதிபதி, அதுவரை சிறப்பு தகுதித் தேர்வுக்கான முடிவுகளை வெளியிட கூடாது என்று இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *