மின்வாரிய ஊழியர்களுக்கு அடையாள அட்டை கட்டாயம்

சென்னை, ஜூலை 9 மின்வாரிய ஊழியர்கள் கண்டிப்பாக அடையாள அட்டை அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் பிறப்பித்த உத்தரவு விவரம்:

தமிழ்நாடு மின்வாரியம், மின் உற்பத்தி கழகம், பகிர்மானக் கழகம், மின் தொடரமைப்புக் கழகம், பசுமை எரிசக்திக் கழகம் ஆகிய அனைத்து பிரிவு ஊழியர்களும் அலுவலக வளாகத்துக்குள் நுழையும்போதும், பணி நேரத்திலும் அடையாள அட்டையை வெளியில் தெரியும்படி கண்டிப்பாக அணிந்திருக்க வேண்டும். பாதுகாப்பு பணியாளர்கள், அதி காரிகள் சோதனையிடும்போது தயக்க மின்றி அடையாள அட்டையைக் காண்பிக்க வேண்டும்.

ஊழியர்கள் இதை முறையாகப் பின்பற்றுவதை சம்பந்தப்பட்ட தலைமைப் பொறியாளர்கள், மேற்பார்வைப் பொறியாளர்கள் உறுதி செய்ய வேண்டும். அலுவலகப் பாதுகாப்பு மற்றும் வெளி நபர்களை எளிதாகக் கண்டறியும் நோக்கில் இந்த பழைய உத்தரவு தற்போது மீண்டும் தீவிரமாக வலியுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் பதவிக்கு விண்ணப்பம் வரவேற்பு

சென்னை, ஜூலை 9 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் தலைவர், உறுப்பினர் (சட்டம்), உறுப்பினர் பதவிகள் காலியாக உள்ளன. இதை நிரப்புவதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எம்.டி.டீக்காராமன் தலைமையில் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு முடிவின்படி, ஒவ்வொரு பதவிக்கும் தனித்தனியாக விண்ணப்பங்கள் 28.7.2026 அன்று மாலை 6 மணி வரை வரவேற்கப்படு கின்றன. இது குறித்த விவரங்கள் http://www.tn.gov.in/department/7 இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப பணிகள்:

 டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

சென்னை, ஜூலை 9- ஊரக வளர்ச்சித்துறை பணி மேற்பார்வை யாளர், சாலை ஆய்வாளர் உள்பட 50 விதமான பதவிகளில் 839 காலி யிடங்களை நிரப்புவதற்காக ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் பானோத் ம்ருகேந்தர் லால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழ்நாடு அரசின் ஊரக வளர்ச்சித்துறையில் உள்ள பணி மேற்பார்வையாளர், இளநிலை வரைதொழில் அலுவலர், சாலை ஆய்வாளர் உள்பட 50 விதமான பதவிகளில் 839 காலிப்பணியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (டிப்ளமா, அய்டிஅய் கல்வித்தகுதி பதவிகள்) அறிவிக்கை வருடாந்திர தேர்வு அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளபடி ஜூலை 7-ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு ஜூலை 17 முதல் ஆகஸ்ட் 15-ஆம் தேதி வரை இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *