திருச்சி, ஜூலை 9- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள், அண்மையில் நடை பெற்ற மாவட்ட அளவிலான பந்து இறகுப்பந்து (Ball Badminton) போட்டியில் பங்கேற்று, மிகுந்த முனைப்புடன் விளையாடி நான் காவது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
இந்தப் போட்டியில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு மாணவி களான ஆர்.வைஷ்ணவி, டி.காயத்ரி, எஸ்.தீக்ஷா, கே.போஷிதாசிறீ, எம்.கனிஷ்கா, ஏ.தீபலட்சுமி, கே.ஜோஷிதா, எம்.ஹர்ஷிதா, எஸ்.சிறீ கிருத்திகா மற்றும் வி.யாழினி ஆகிய மாணவிகள் பங்கேற்றுத் திறம்பட விளையாடினர்.
இவர்களில் எஸ்.தீக்ஷா மற்றும் எஸ்.சிறீகிருத்திகா ஆகிய இருவரும், அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டியில் திருச்சி மாவட்ட அணி சார்பில் விளையாடத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாணவிகளின் இந்த குறிப்பிடத் தக்க விளையாட்டுத் திறன் மற்றும் சாதனையையும், அவர்களைப் பயிற்றுவித்தப் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் கோகுல், சவுமியா ஆகியோரைப் பாராட்டி, தாளாளர், பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் தங்களது நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
விளையாட்டில் தொடர்ந்து சிறந்து விளங்கி, மாவட்டத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் எனப் பள்ளி நிர்வாகம் சார்பாக மாணவிகள் ஊக்கப்படுத்தப் பட்டனர்.
தங்கள் பள்ளி மாணவிகளின் இந்த வெற்றி, சக மாணவர்களுக்கும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொள்ள ஒரு சிறந்த முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
