பெரியார் பாலிடெக்னிக்கில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், புதுமை தொழில் முனைவோர் சிந்தனை மற்றும் தொழில் தொடங்க செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

1 Min Read

வல்லம், ஜூலை 3- பெரியார் முன்-தொழில் தொடக்க அறக் கட்டளை [Periyar Foundation for Pre-Incubation (PIC)] சார்பில் “Build & Beyond – Evolution of Robotics & Artificial Intelligence” என்ற நிகழ்ச்சி 30.06.2026 அன்று பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியில் புதிய ஏவி அரங்கில் நடைபெற்றது.

டாக்டர் கென்னித்ராஜ் அன்பு, Transen Dynamics Pvt. Ltd., சென்னை நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு (AI), ரோபோட்டிக்ஸ், AI வகைகள், தொழில்துறை பயன்பாடுகள் மற்றும் வேலை வாய்ப்புகள் ஏஅய் & ரோபோட்டிக்ஸ் துறையில் தொழில்முனைவோருக்கான வழிமுறைகள் குறித்து விளக்கமளித் தார்.

மேலும், தனது தொழில்முறை பயணத்தை பகிர்ந்து புதுமை சிந்தனை மற்றும் தொடர்ச்சியான கற்றலின் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

இந்நிகழ்ச்சியில் இக்கல்லூரியி லுள்ள 160 மாணவர்களும் 7 ஆசிரி யர்களும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியை இரண்டாம் ஆண்டு கணினி தொழில்நுட்பத் துறை மாணவி எஸ்.சாஹித்யா தொகுத்து வழங்கினார். மூன்றா மாண்டு கணினி தொழில்நுட்பத் துறை மாணவி எல்.பிரியங்காசிறீ வரவேற்புரை வழங்கினார். மூன் றாமாண்டு கணினி தொழில்நுட்பத் துறை மாணவி பி. பஸ்ரினாஷ்ரின் நிகழ்ச்சி அறிமுகம் மற்றும் சிறப்பு விருந்தினர் அறிமுகத்தை வழங் கினார். மூன்றாமாண்டு கணினி தொழில்நுட்பத் துறை மாணவி எம்.தரணி நன்றியுரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் Periyar Foundation for Pre-Incubation, CEO முனைவர் க.ரோஜா, Pre- Incubation Manager J.Praveen Raj மற்றும் Pre- Incubation Associate K. Gopi ஆகியோர் கலந்து கொண்டனர்.

டிப்ளமோ மாணவர்களிடம் செயற்கை நுண்ணறிவு, ரோபோட் டிக்ஸ், புதுமை, தொழில் முனை வோர் சிந்தனை மற்றும் முன்-தொழில் தொடக்க (Pre-Incubation) செயல்பாடுகள் குறித்த விழிப் புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *