திருச்சி, ஜூலை 3 திருச்சி அரசு மருத்துவமனையில் புற்றுநோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிய உதவும் நவீன ஸ்கேன் வசதி விரை வில் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
திருச்சி அரசு மருத்துவ மனையில் தினமும் ஆயிரக் கணக்கான நோயாளிகள் சிகிச் சைக்காக வருகிறார்கள். நோயின் தன்மை அடிப்படை யில் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. தேவைப்படுபவர்கள் உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார்கள்.இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு, இதய நோய், கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் பல், எலும்பு நோய்கள், தோல் நோய்கள் உள்ளிட்ட அனைத்து நோய்களுக்கான சிகிச்சை பிரிவுகள் இருந் தாலும் புற்று நோய்க்கான தனி பிரிவு இன்னும் அமைக்கப் படவில்லை.
புற்றுநோயாளிகளுக்கு ஒரு சில சிகிச்சைகள் மட்டுமே இங்குஅளிக்கப்பட்டு வருகிறது. தீவிர நிலையில் உள்ள புற்றுநோயாளிகள் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கே அனுப்பி வைக்கப்படுகிறார்கள். திருச்சி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்குசி.டி. ஸ்கேன்,எம்.ஆர்.அய். ஸ்கேன் எடுக்கும் வசதிகள் உள்ளன.எம்.ஆர்.அய். ஸ்கேன் 24 மணி நேரமும் எடுக்கும் வகையில் செயல் பட்டு வருகிறது. காத்திப்பு நேரமும்குறைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புற்று நோயின் தன்மையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதற் கான நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பெட் ஸ்கேன் (றிமீt sநீணீஸீ) வசதி திருச்சி அரசு மருத்துவ மனையில்விரைவில் பயன் பாட்டிற்கு வர உள்ளது. இந்த ஸ்கேன் மூலம் புற்றுநோயின் தன்மை, அது எந்த அளவு பரவக்கூடியநிலையில் உள்ளது என்பதை துல்லிய மாக கண்டுபிடிக்க முடியும். இதன் மூலம் நோய் தீவிரம் அடைவதற்குள் சரியான சிகிச்சை அளிக்க முடியும்.
இது குறித்து அரசு மருத்துவமனை மருத்துவர் கள் கூறுகையில், பெட் ஸ்கேன் என்பது உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் திசுக்கள் எவ்வாறு செயல்படு கின்றன என்பதை அணுக் கதிர் தொழில்நுட்பம் மூலம் படம் பிடித்துக் காட்டும் ஒரு மேம்பட்டமருத்துவப் பரிசோதனை ஆகும். பெட் ஸ்கேன் புற்றுநோயைக் கண்டறிவதிலும், அதற்கான சிகிச்சையைத் திட்ட மிடுவதி லும் மிக முக்கியப் பங்கு வகிக் கிறது. உடலில் புற்று நோய் செல்கள் எங்குத் தொடங்கியுள் ளன என்பதை ஆரம்பக் கட்டத்திலேயே இது துல்லிய மாகக் காட்டும். மேலும் புற்று நோய் உடலின் மற்ற பாகங் களுக்கும் பரவியிருக்கிறதா? என்பதை அறிய உதவுகிறது. கீமோதெரபி அல்லது கதிர் வீச்சு சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு, புற்று நோய் கட்டிகள் சுருங்கியுள்ளனவா, சிகிச்சை வேலைசெய்கிறதா? என்பதைத் தெரிந்து கொள்ள வும் இது பயன்படுகிறது என்று தெரிவித்தனர்.
