குறுவை சாகுபடி பொய்த்து போனதால் ஏக்கருக்கு ரூ. 40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை

3 Min Read

திருச்சி, ஜூலை 3 திருச்சி மேற்குவருவாய் கோட்டாட்சியர் அலுவலகத் தில், நடப்பு மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது.

திருச்சி மேற்கு வருவாய் கோட்டாட்சியர் அலுவ லகத்தில் இம்மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருவாய் கோட்டாட்சியர்சாலை தவவளவன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாய சங்க பிரதி நிதிகள் திரளாக கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர்.

கூட்டத்தில், விசுவ நாதன் (மாநில தலைவர், தமிழக ஏரி மற்றும்ஆற்றுப்பாசன விவசாயிகள்சங்கம்) பேசியதாவது: திருவெறும்பூர் வட்டாரத்தில்குளங்கள், ஏரிகளிலுள்ள வேலிக்கருவை மரங்களை அகற்றுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, குளங்களில் வண்டல் மண் எடுப்பதற்கு அனு மதி பெற்றுக்கொண்டு ஒரு மீட்டருக்கு கீழே மண் எடுப்பவர்கள் மீது நடவடிக் கை எடுக்க வேண்டும். மேட்டூர்அணையில் இருந்து காவிரி நீர் திறந்து விடப்படாத தால் இந்த ஆண்டு குறுவை சாகுபடி பொய்த்துவிட்டது. இதனால்பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். சம்பா பருவத்திற்கு தடையின்றி, மானியத்தில்-20 ரக நெல் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவெறும்பூர் தாலுகாவிலுள்ள கொள்முதல் நிலையங்களில் கோடையில் சாகுபடி செய்த நெல்லை தேக்கமின்றி உடனுக்கு டன் கொள்முதல் செய்ய ஆவண செய்ய வேண்டும். உய்யக் கொண்டான் வாய்க்கால் முதல் வாழவந்தான் கோட்டை ஏரி வரையிலான பகுதிகளில் தூர் வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

அயிலை சிவசூரியன் (மாவட்ட செயலாளர், தமிழ் நாடு விவசாயிகள் சங்கம்) பேசியதாவது:தட்கல் திட்டத்தில் பணம் செலுத்திய விவசாயிகளுக்குமின் இணைப்பு வழங்க உடன் நடவடிக்கைஎடுக்க வேண்டும். மின் வாரியத்தில் 2025- 26  ஆம் ஆண்டுக்கான விரைவு மின் இணைப்பு பெற தட் கல் திட்டத்தில் திருச்சி மாவட்டத்திற்கு 367 மின் இணைப்புகள்உட்பட மாநிலம் முழுவதும் 10 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்க திட்டமிட்டு அதற்கான அறிவிப்பு கடந்த 15.12.2025 அன்று அறிக்கை வெளி யிடப் பட்டது. அறிக்கை வெளியான மறுநாளே 10 ஆயிரம் மின் இணைப்புக்கு விவசாயிகள் விண்ணப்பித்தனர் இதில் 5-குதிரை திறன்சக்தி கொண்ட மோட்டார் மின் இணைப்புக்கு ரூ.2.50 லட்சம், 5 முதல் 7.5 குதிரை திறன் மோட்டார் இணைப் புக்கு ரூ.2.75 லட்சமும், 75 முதல் 10 குதிரை திறன் கொண்ட மோட்டார் இணைப்புக்கு ரூ.3.லட்சமும், 10 முதல் 15 குதிரை திறன் கொண்டமேட்டார் இணைப்புக்கு ரூ.4. லட்சம் என பணம் செலுத்திய ‘விவ சாயிகளுக்கு இதுவரை மின் இணைப்பு கிடைக்க வில்லை. நிலத்தடி நீரை நம்பி பம்பு செட்டு பாசனம் மேற்கொள்ள திட்டமிட்டு, பல லட்சம் கடன் பெற்று தட்கல் திட்டத்தில் பணம் செலுத்திய விவசாயிகள் பெரும் பிரச்சினையில் உள்ளனர். எனவே மின் வாரியம் தட்கல் திட்டத்தில்  பணம் செலுத்திய விவசாயி களுக்கு உடன் மின் இணைப்பு வழங்க வேண்டும் என்றார்.

அய்யாக்கண்ணு (மாநிலத் தலைவர்தேசிய- தென்னிந்தியநதிகள் இணைப்புவிவசாயிகள் சங்கம்) பேசும் போது, நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகளிடம் ரூ.60 வாங்கும் நடைமுறைகளுக்கு முற்றுப்புள்ளிவைக்க வேண்டும். காவிரி நடுவர் நீதிமன்றம் தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கக் கோரி கர்நாடக அரசுக்கு உத்தர விட்டும், தண்ணீர் திறக்காத கர்நாடக அரசு மீது உச்சநீதி மன்றத்தில் தமிழ்நாடு வழக்கு தொடக்க வேண்டும். மேல சிந்தாமணி அருகில் காவிரி ஆற்றில் மனித கழிவுகள் கலப்பதையும், உழவர் சந்தை அருகில் உய்யக்கொண்டான் வாய்க்காலில்கழிவுநீர் கலப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.

செல்வராஜ் (மாவட்டக் குழு உறுப்பினர், தமிழ்நாடு விவசாயிகள்சங்கம்) பேசும்போது: விவசாயிகள் அனைவருக்கும் தேர்தல் கால வாக்குறுதிப்படிவிவசாய கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். தேர்தல் வாக்குறுதியாக 5 ஏக்கர் நிலம் உள்ள சிறு விவசாயிகள் பெற்ற விவசாய கடன்கள்முழுவதையும் தள்ளுபடி செய்யப்படும், 5 ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகள் பெற்ற கடன் 50% தள்ளுபடி செய்யப்ப டும் என தற்போதைய அரசு வாக்குறுதி அளித்திருந்தது. அதை முழுமையாக நிறை வேற்ற வேண்டும் என்றார்.

கூட்டத்தில், வேளாண்மை துறை அலுவலர்கள், தோட்டக் கலைத்துறை அலுவலர்கள், வேளாண் பொறியியல் துறை அலுவலர்கள், வனத்துறை அலுவலர்கள்கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *