புதுடில்லி, ஜூலை 3 இந்தியா வின் அரசியலமைப்பு, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி கட்டமைப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களுக்கு எதிராக மக்களைத் திரட்டும் வகையில், வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி முதல் நாடு தழுவிய அளவில் தீவிர அரசியல் பிரச்சாரத்தைத் தொடங்க உள்ளதாக இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி (CPI) அறிவித்துள்ளது.
டில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி. ராஜா இது குறித்துப் பேசியதாவது:
பொருளாதார நெருக்கடி
“தற்போது நாடு மிகவும் சவா லான மற்றும் கவலைக்குரிய சூழலைச் சந்தித்து வருகிறது. பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி மற்றும் சமூக கலாச்சார நெருக்கடி என பலமுனை நெருக்கடிகளில் இந்தியா சிக்கித் தவிக்கிறது. இத்தகைய சூழலில், நாட்டின் குடியரசு, அரசியலமைப்பு மற்றும் ஜனநா யகத்தைப் பாதுகாப்பது நமது கடமையாகும். இதற்காக மக்களைச் சென்றடைந்து, அவர்களைத் திரட்டி, ஊக்கப்படுத்துவது அவசிய மாகிறது.”
முக்கியப் பிரச்சினைகள்
வேலையின்மை, விலைவாசி உயர்வு, கிராமப்புற நெருக்கடி, கூட்டாட்சி தத்துவத்தின் மீதான தாக்குதல், கல்வி மற்றும் தேர்தல் சீர்திருத்தங்கள்.
கிராமங்கள் மற்றும் நகரங்கள் என அனைத்துப் பகுதிகளிலும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் மாநாடுகள் நடத்தப்படும்.
கால அட்டவணை
வரும் ஆகஸ்ட் 6-ஆம் தேதி தொடங்கும் இந்த நாடு தழுவிய அரசியல் பிரச்சாரம், ஆகஸ்ட்
15-ஆம் தேதி வரை தீவிரமாக நடை பெறும். இவ்வாறு அவர் பேசினார்.
மாறிவரும் அரசியல் சூழலில், மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினை களையும், ஜனநாயகத்தையும் காக்க கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுக்கும் இந்தத் தொடர் இயக்கம் அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
