எச்சரிக்கை! செங்கல்பட்டு அருகே சிலிண்டர் வெடித்து மூன்று பேர் படுகாயம்

1 Min Read

செங்கல்பட்டு, ஜூலை 3 செங்கல்பட்டு, நத்தம் நடுத் தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார் (64). இவர், தனது வீட்டின் வாசல்படி அருகே சமையல் எரிவாயு சிலிண்டரை வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று (2.7.2026) அதிகாலை வீட்டுக்கு வெளியே நின்றிருந்த காரை எடுப்ப தற்காக ஜெயக்குமார் வெளியே வந்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த இன்வெர்ட் டரில் திடீரென மின்கசிவு ஏற்பட்டது. இதனால் அதன் அருகில் இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.

இந்த திடீர் சிலிண்டர் வெடிப்பில் சிக்கி வீட்டின் உரிமையாளர் ஜெயக்குமார் (64), சண்முகம் (70) மற்றும் கார்த்திகேயன் (30) ஆகிய 3 பேர் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். மேலும், சிலிண்டர் வெடித்த வேகத்தில், அருகில் இருந்த கார் மற்றும் ஏசி மெஷின் போன்றவை திடீரென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் நாசமானயின. சிலிண்டர் வெடித்து கார் தீப்பிடித்து எரிவதை பார்த்து அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

மேலும், சிலிண்டர் வெடித்து தீப்பிடித்ததில் படுகாயம் அடைந்த ஜெயக்குமார் உள்பட 3 பேரையும் மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு நகர காவல்துறையினர்  வழக்குப்பதிவு செய்து, அப்பகுதி கண்காணிப்பு படக் கருவில் பதிவுகளை ஆய்வு செய்து, மின்கசிவினால் சிலிண்டர் வெடித்ததில் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் இன்று காலை பரபரப்பு நிலவியது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *