தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவக் கல்விக்கு நீதிபதி கோவிந்தராஜ் தலைமையிலான குழு கட்டணம் நிர்ணயம்

1 Min Read

சென்னை, ஜூலை 3- தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தனியார் மருத்துவக் கல்லூரிகளில் துணை மருத்துவ படிப்புகளுக்கு, அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, அரசு மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டுக்கான ஆண்டு கல்விக் கட்டணத்தை நிர்ண யிக்க, உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்த ராஜ் தலைமையிலான குழு அமைக் கப்பட்டது. அந்த குழு, துணை மருத்துவ படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

அதன்படி, டிப்ளமா படிப்பு களில் அரசு ஒதுக்கீட்டு இடங் களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் ரூ.35 ஆயிரம் வரையும், நிர்வாக ஒதுக் கீட்டு இடங்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையும் ஆண்டு கல்விக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இளங்கலை பட்டப் படிப்புகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.50 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.1.20 லட்சம் வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *