தமிழ்நாட்டில் 17-ஆம் தேதி முதல் சுய கணக்கெடுப்பு பணித் தொடக்கம்

சென்னை, ஜூலை 3- தமிழ்நாட்டில் வரும் 17-ஆம் தேதி முதல் சுய கணக்கெடுப்பு பணி தொடங்கப்படும் என வருவாய் நிர்வாக ஆணையரும், மாநில கணக்கெடுப்பு ஒருங் கிணைப்பு அலுவலருமான முருகானந்தம் தெரிவித் துள்ளார்.

கணக்கெடுப்பு மாநாடு

மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-அய் முன்னிட்டு, தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள முதல் கட்ட வீட்டுப் பட்டியலிடும் பணிகளுக்கான ஆயத்த நிலையை ஆய்வு செய்யும் மாநில அளவிலான முதன்மை கணக்கெடுப்பு அலுவலர்கள் மாநாடு, சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் வருவாய் நிர்வாக ஆணையரும், மாநில கணக்கெடுப்பு ஒருங்கி ணைப்பு அலுவலரு மான முருகானந்தம் தலைமையில் நடைபெற்றது.

டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு

இந்த மாநாட்டில், கணக்கெடுப்புக்கான செயல்முறை, கால அட்டவணை மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோ சிக்கப்பட்டது. அப்போது பேசிய முருகானந்தம், “மக்கள்தொகை கணக் கெடுப்பு மாநிலத்தின் நிர்வாகம், வளர்ச்சிக்கான திட்டமிடல், கொள்கை வகுத்தல், நிதிப்பகிர்வு உள்ளிட்ட அரசின் முக்கிய நடவடிக்கைகளுக்கு அடித் தளமாக விளங்குகிறது. இந்தியாவின் முதல் முழுமையான டிஜிட்டல் மக்கள்தொகை கணக் கெடுப்பாக உள்ள இந்த கணக்கெடுப்பில், சுய கணக்கெடுப்பு மற்றும் வீட்டு பட்டியலிடும் கணக் கெடுப்பும் இடம் பெறவுள்ளது.

17-ஆம் தேதி தொடக்கம்

அதன்படி, ஜூலை 17-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை சுய கணக்கெடுப்பும், ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை வீட்டுப் பட்டியலிடும் பணிகளும் நடைபெறும்” என்று தெரிவித்தார். இந்த மாநாட்டில், 37 மாவட்ட ஆட்சியர்கள், 25 மாநகராட்சி ஆணை யர்கள், தமிழ்நாடு அரசின் மூத்த அதிகாரிகள், மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக அதிகாரிகள் மற்றும் மாநில அளவிலான கணக்கெடுப்பு ஒருங்கி ணைப்புக் குழு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *