திராவிடர் கழக தலைவர் அன்னை ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு நாள் கருத்தரங்கம் குமரி மாவட்ட கழகம் சார்பாக நாகர்கோவில் பெரியார் மய்யத்தில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
அன்னை மணியம்மையார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கலை இலக்கிய அணி செயலாளர் பா.பொன்னுராசன் , மாவட்ட துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள் ஆகியோர் உரையாற்றினர். பகுத்தறிவாளர்கழக மாவட்ட தலைவர் உ.சிவதாணு கருத்துரையாற்றினார். கழக மாவட்ட அமைப்பாளர் ஞா.பிரான்சிஸ், திராவிட மாணவர் கழக மாவட்ட அமைப்பாளர் இரா.கோகுல், மாநகர கழக துணைத் தலைவர் கவிஞர் எச். செய்க்முகமது பங்கேற்றனர். தோழர்கள் ச.ச.மணிமேகலை, சுசீந்திரம் மகா ராஜன் உரையாற்றினர். மு. குமரிச் செல்வர் , முத்துவைரவன் ந.தமிழ் அரசன், மாஸ்டர் இரா.முகிலன், சந்தோஷ் , மற்றும் பலரும் கலந்துகொண்டனர்.