மேட்டுப்பாளையம், ஜூன் 21- மேட்டுப்பாளையம் மாவட்டம் குட்டை புதூர் பகுதியில் திராவிட மாணவர் கழகம் சார்பாக மாணவர் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட கழகத் தலைவர் சு.வேலுச்சாமி தலைமை தாங்கினார்.
மாநில கழக இளைஞர் அணிதுணைச் செயலாளர் மு.வீரமணி முன்னிலை வகித்தார். ந.விக்னேஷ் வரவேற்புரை ஆற்றினார். மாவட்ட திராவிடர் கழகச் செயலாளர் கா.சு அரங்கசாமி தொடக்க உரையாற்றினார்.
மாநில திராவிட மாணவர் கழக இணை செயலாளர் மு.இளமாறன், மாநில மாணவர் கழகத் துணைச் செயலாளர் தேவ.நர்மதா, மு.இராகுலன் ஆகியோர் மாணவர்களுடன் கலந்துரையாடினர். மாநில திராவிடர் மாணவர் கழகத்தின் செயலாளர் இரா செந்தூரப்பாண்டியன் சிறப்புரையாற்றினார்.
மாவட்ட இளைஞர் அணி தலைவர் ந.பிரதீப் நன்றியுரை கூறினார். மாவட்ட கழக துணைச் செயலாளர் க.நாராயணன் நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். கலந்து கொண்ட அனைவருக்கும் தேக்கம்பட்டி மற்றும் சிவகுமார் சமையல் குழு சார்பாக மதிய உணவு வழங்கப்பட்டது.
கூட்டத்தில் புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். பொறுப்பாளர்களை மாவட்டத் தலைவர் சு.வேலுச்சாமி பரிந்துரைக்கு ஏற்ப மாநில மாணவர் கழக செயலாளர் இரா.செந்தூரபாண்டியன் அவர்களால் நியமிக்கப்பட்டனர்.
தலைவர்: ந.விக்னேஷ் குமார்,
துணைத் தலைவர்: மூ.பரத்
செயலாளர்: மோ.விஷ்ணு
துணைச் செயலாளர்: சி ராகுல்
மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறிய கிராமத்தில் இந்நிகழ்வு வெகு சிறப்பாக நடைபெற்றது.
