திண்டிவனம் கழக மாவட்ட சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்த நாள் விழா

2 Min Read

திண்டிவனம், ஜூன் 18- திண்டிவனம் மாவட்ட கழக சார்பில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் விழா திராவிடர் எழுச்சிநாள் பொதுக்கூட்டம் ஜூன் 11ஆம் தேதி திண்டிவனம் மாவட்ட கழகத் தலைவர் இர.அன்பழகன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

மாவட்டக் காப்பாளர் செ.பரந்தாமன், மாவட்ட துணைத் தலைவர் ச.அன்புக்கரசன், மாவட்ட துணைச் செயலாளர் ஏ.பெருமாள், பொதுக்குழு உறுப்பினர் பா.வில்லவன் கோதை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் தா.இளம்பரிதி அனைவரையும் வரவேற்று பேசினார்.

நிகழ்ச்சியில் சிபிஅய் மாவட்டச் செயலாளர் ஆ.சவுரிராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சு.மலைச்சாமி, மதிமுக மாவட்டச் செயலாளர் பாபு கோவிந்தராஜ், தேமுதிக நகர செயலாளர் காதர்பாஷா, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மரக்காணம் ஒன்றிய செயலாளர் பழனி, திராவிடர் கழகத்தின் புதுவை மாநில தலைவர் சிவ.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில தீர்மானக்குழு உறுப்பினர் இரா. சேது நாதன் மாநில தீர்மானக் குழு துணை தலைவர் டாக்டர் இரா.மாசிலாமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வடக்கு மாவட்டச் செயலாளர் முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடக்க உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து திராவிடர் கழகத்தின் துணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார். அவர் தமதுரையில், பெண்களுக்கான சொத்துரிமை மற்றும் காவலர் பணியில் பெண்களுக்கு வேலை வாய்ப்பை கொண்டு வந்தவர் கலைஞர் என்ற வரலாற்று தகவல் குறித்து பேசினார். மகளிர் வாழ்வு மேம்பட மகளிர் சுய உதவிக்குழு கொண்டு வந்தவர் கலைஞர் என்றும்.. 25 ஆண்டுகளுக்கு முன்பே சென்னை தரமணியில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கொண்டு வந்து இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்தவர் கலைஞர் என்றும் பேசினார். இறுதியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் தா.தம்பிபிரபாகரன் நன்றியுரையாற்றினார்.

நிழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மயிலம் மத்திய ஒன்றியச் செயலாளர் கோ.செழியன், வடக்கு ஒன்றியச் செயலாளர் மணிமாறன், புதுவை மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், புதுவை மாவட்டச் செயலாளர் இராசா, விழுப்புரம் மாவட்டத் தலைவர் சே.வ.கோபன்னா, விழுப்புரம் மாவட்ட பகுத்தறிவாளர்கள் கழக தலைவர் துரை.திருநாவுக்கரசு, பழங்குடி இருளர் முன்னணி தலைவர் சுடரொளி சுந்தரம், மாநில மாணவர் கழக துணைச் செயலாளர் செ.பெ.தொண்டறம், மாவட்டஇளைஞரணித் தலைவர் மு.இரமேஷ், நகரதலைவர் உ. பச்சையப்பன், பாஞ்சலம் கழகத் தோழர்கள் விநாயகமூர்த்தி, இராஜாராம், அருள், திருமாவளவன், மகளிரணித் தோழர்கள் சாந்தி பெருமாள், கஸ்தூரி அன்புக்கரசன், நிவேதா, தேன்மொழி மற்றும் திராவிட முன்னேற்ற கழகப் பொறுப்பாளர்கள், விழுப்புரம், திண்டிவனம், புதுவை மாவட்ட கழகத் தோழர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *