குமரி மாவட்ட கழகம் சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம் கன்னியாகுமரி கொட்டாரத்தில் நடைபெற்றது. தந்தை பெரியார். தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோர் எழுதிய பகுத்தறிவு நூல்கள், பகுத்தறிவு சிந்தனைகள் அடங்கிய துண்டறிக்கைகள் பொது மக்களுக்கு வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கு கன்னியாகுமரி மாவட்ட கழகச் செயலாளர் கோ. வெற்றிவேந்தன் தலைமை தாங்கினார். கழக பொதுக் குழு உறுப்பினர் மு.இராஜசேகர் முன்னிலை வைத்தார். கழக பேச்சாளர் பொன்.அருண்குமார் இந்த பிரச்சாரத்தினை தொடங்கி வைத்தார். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.அலெக்ஸாண்டர், பெனிஷ்ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தந்தை பெரியார், தமிழர் தலைவர் வீரமணி அவர்களின் சிந்தனைகள் அடங்கிய நூல்களையும் துண்டறிக்கைகளையும் பொதுமக்கள் ஆர்வமுடன் கருத்தூன்றி படித்தனர்.
குமரி மாவட்டத்தில் விழிப்புணர்வுத் துண்டறிக்கைகள்
1 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
