கடவுள் என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட மனிதர், கடவுள் நம்பிக்கைக்காரர்களில் ஒருவராவது உண்டா? ஒரு வஸ்து இருந்தால்தானே அது இன்னது என்று புரிந்து கொள்ள முடியும்? அது இல்லாததனாலேயே கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஆளுக்கு ஒரு விதமாய்க் கடவுளைப் பற்றி உளறிக் கொட்டி – அதற்குப் பெயரும் பலப்பலச் சொல்லுவதா? அதன் எண்ணிக்கையையும் பலப்பல சொல்லி மக்களைக் குழப்புவதா? உருவத்தைப் பலப்பல சொல்லி, இன்னதென உணர முடியாத அளவுக்கு அதன் குணம் இவை என பலப்பல சொல்லி, அதன் செய்கை என வெவ்வேறாகப் பலப்பலச் சொல்லி மக்களை முட்டாள்களாக்குவதா?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’