சேலம் மாநகரில் நடக்க உள்ள (17.12.2023) தி.மு.க. – 2ஆவது மாநில இளைஞரணி மாநாடு விளக்க இரு சக்கர வாகனப் பிரச்சாரப் பேரணி தமிழ்நாடு முழுக்கப் பிரச்சாரம் செய்யும் நிலையில் – சென்னை சட்டமன்றத் தொகுதிகளில் இன்று (26.11.2023) பிரச்சாரம் நடைபெறுகின்றது. சென்னை பெரியார் திடலில் உள்ள தந்தை பெரியார் சிலை அருகில் காலை 10 மணியளவில் எழும்பூர் தொகுதி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் உயர்நீதிமன்ற வழக்குரைஞர் இந்து அறநிலையத் துறையின் சென்னை மாவட்ட அறக்காவலர் குழுத் தலைவர் சிவ. இரவிச்சந்திரன் இப்பேரணியைத் தொடங்கி வைத்தார். தி.மு.க. பொறுப்பாளர்கள் பலரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
தந்தை பெரியார் சிலையின் அருகிலிருந்து தி.மு.க. இளைஞரணி 2ஆவது மாநில மாநாடு விளக்க சக்கர வாகன பேரணி தொடக்கம்
Leave a Comment