‘எம்ஃபில் – கிளினிக்கல் சைக்காலஜி’ சேர்க்கை!

சென்னை, ஜூன் 10- எம்ஃபில் கிளினிக்கல் சைக்காலஜி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக, மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:
எம்ஃபில் கிளினிக்கல் சைக்காலஜி படிப்பில் 2025-2026ஆம் ஆண்டு சேர்க்கைக்கு உளவியல் முதுகலை பட்ட தாரிகளிடமிருந்து இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு ஜூன் 15ஆம் தேதி முடிவடைகிறது. நுழைவுத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்படுவர். நுழைவுத் தேர்வு ஜூன் 21ஆம் தேதி நடைபெறும்.
எம்ஃபில் கிளினிக்கல் சைக்காலஜி படிப்பில் சேர சைக்காலஜி, அப்ளைடு சைக்காலஜி. கவுன்சிலிங் சைக்கலாஜி, கிளினிக்கல் சைக்காலஜி-யில் எம்ஏ அல்லது எம்எஸ்சி பட்டம் ரெகுலர் முறையில் பெற்றிருக்க வேண்டும்.
இளங்கலை பட்டப் படிப்பிலும் சைக்காலஜி படித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 55 சதவீத மதிப்பெண் அவசியம்.
இடஒதுக்கீட்டுப் பிரிவினர் எனில் 50 சதவீத மதிப்பெண் போதும். 2 ஆண்டு காலம் கொண்ட இந்த படிப்பில் மொத்தம் 10 இடங்கள் உள்ளன.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *