திருவனந்தபுரம், ஜூன்.4- கேரளம் மாநில 16-ஆவது சட்டப் பேரவை முதல் கூட்டம் கடந்த மாதம் 29-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் கேரள சட்டப்பேரவைக்கு துணைத் தலைவர் தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அய்க்கிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் ஷானி மோள் உஸ்மான் 99 ஒட்டுகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட இடது ஜனநாயக முன்னணி வேட்பாளர் முகம்மது முகசிற்கு 34 ஓட்டுகள் மட்டுமே கிடைத்தன. இதன்மூலம் 35 ஆண்டுகளுக்கு பின்னர் கேரள சட்டப் பேரவையில் ஒரு பெண் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார்.
