புதுடெல்லி, மார்ச் 25 உயர்நீதிமன்றங் களில் பிராந்திய மொழிகள் வேண்டாம் என உச்சநீதிமன்றம் முடிவு செய் திருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்து உள்ளது.
கருநாடகத்தைச் சேர்ந்த மாநிலங் களவை காங்கிரஸ் உறுப்பினர் சையத் நசீர் உசேன், உயர்நீதிமன்றங்களில் பிராந் திய மொழிகளை பயன்படுத்துவது தொடர்பான கேள்விகளை மாநிலங் களவையில் எழுப்பி இருந்தார். இதற்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அந்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:- உயர்நீதிமன்றங்களில் அனைத்து நடவடிக்கைகளும் ஆங்கிலத்தில் இருக்க வேண்டும் என அரசமைப்பு பிரிவு 348(1) (அ) கூறுகிறது. அதேநேரத்தில், குடியரசுத் தலைவரின் முந்தைய ஒப்புதலுடன் ஹிந்தி மொழி பயன்படுத்துவதை அங்கீகரிக்கலாம் அல்லது மாநிலத்தின் அதிகாரப்பூர்வ நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் வேறு எந்த மொழியையும் உயர்நீதி மன்றம் நடவடிக்கைக்கு அங்கீகரிக்க லாம் என 348-ன் உட்பிரிவு 2 கூறுகிறது.
ஆனால் உயர்நீதிமன்றங்களில் ஆங் கிலம் அல்லாத வேறு எந்த மொழி களையும் பயன்படுத்துவது தொடர் பான முன்மொழிவுகளுக்கு இந்திய தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற வேண்டும் என்று 21-.5.-1965ஆ-ம் நாளைய அமைச்சரவையின் குழு, நிபந்தனை விதித்துள்ளது. இதற்கிடையே, 1950ஆ-ம் ஆண்டு அரசமைப்பு சட்டம் 348-வது பிரிவின் உரிய பிரிவுகளின் கீழ் ராஜஸ் தான் மாநில உயர்நீதிமன்றத்தில் ஹிந்தி வழக்காடு மொழியாக அங்கீகரிக்கப்பட் டது. அதன்பிறகு உத்தரபிரதேச மாநில உயர்நீதிமன்றத்தில் 1969-ஆம் ஆண்டும், ஒன்றிய பிரதேசத்தில் 1971ஆ-ம் ஆண்டும், பீகாரில் 1972ஆ-ம் ஆண்டும் ஹிந்தி வழக்காடு மொழியாக இந்திய தலைமை நீதிபதியின் ஒப்புதலுக்கு பிறகு அங்கீகரிக்கப்பட்டது. தமிழ்நாடு, குஜராத், சத்தீஷ்கார், கொல்கத்தா மற்றும் கருநாடகா ஆகிய மாநிலங்கள் தங்களது மாநில மொழிகளை பயன் படுத்த அனுமதி கேட்டன. இதற்கான முன்மொழிவுகளை இந்திய அரசு பெற்றது. இதுகுறித்து இந்திய தலைமை நீதிபதியிடம் ஆலோசனை கேட்கப்பட் டது. உரிய விவாதங்களுக்குப் பிறகு, அந்த முன்மொழிவுகளை ஏற்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இதன்பிறகும் அதனை மறு ஆய்வு செய்யுமாறு தமிழ்நாடு அரசு மற்றொரு கோரிக்கையை முன்வைத்தது. இதற்கும் ஒப்புதல் அளிக்கப்படவில்லை. முந்தைய முடிவு களே மீண்டும் வலியுறுத்தப்பட்டது.
சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் கீழ், இந்திய பார் கவுன்சில், இந்தியாவின் மேனாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ. போப்டே தலைமையில் ‘பாரதிய பாஷாசமிதி’யை அமைத்துள்ளது. சட்டப்பூர்வ விஷயங்களை பிராந்திய மொழிகளில் மொழிபெயர்க்கும் நோக்கத்துக்காக அனைத்து இந்திய மொழிகளுக்கும் நெருக்கமான, ஒரு பொதுவான சொற்களஞ்சியத்தை இந்த குழு உருவாக்குகிறது. மேலும், சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் சட்டமன்றத்துறையானது ஹிந்தியில் 65 ஆயிரம் சொற்களைக் கொண்ட சட்டப்பூர்வ சொற்களஞ்சியத்தை டிஜிட்டல் மயமாக்குவதற்கும், அதை பொது தளத்தில் தேடக்கூடிய வடிவத் தில் அனைவரும் பயன்படுத்துவதற்கும் தயார் செய்துள்ளது. இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.