மேட்டூர், மே 25 மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் (23.5.2026) விநாடிக்கு 1,027 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (24.5.2026) காலை 471 கனஅடியாக சரிந்துள்ளது. குடிநீருக்காக அணையில் இருந்து விநாடிக்கு 1,000 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. வரத்தை காட்டிலும் நீர் திறப்பு அதிகமாக உள்ளதால், நேற்று முன்தினம் 78.91 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 78.84 அடியாக சரிந்தது.
